
பழனி ஷஹான்:
கிருஷ்ணசாமி யார் என்பதை, அவர் எங்கே விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்
என்பதை ஒவ்வொரு பேட்டியிலும் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார். முன்னர்
இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசினார், இப்போது மாட்டுக் கறித் தடையை
ஆதரிக்கிறார்.இராமதாஸின் வழியில் பயணிக்கத் தொடங்கிய கிருஷ்ணசாமி, மாட்டுக்கறிப் பிரச்சினையில் படுத்தேவிட்டார். தனக்கான இருப்பு கேள்விக்குள்ளாகியதை தக்க வைத்துக்கொள்வதற்குப் புலம்புகிறார் கிருஷ்ணசாமி. தர்மபுரியில் சாதி வெறியாட்டத்தை எதற்காக இராமதாஸ் உருவாக்கினாரோ, அதே கொள்கைக்காகத்தான் இப்போது கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார்.
1996இல் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்று முதன்முதலாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் கிருஷ்ணசாமி. அது எஸ்.சி., ரிசர்வ்ட் தொகுதி. அந்த இடஒதுக்கீட்டை முன்வைத்துத்தான் அவர் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இனித்த இடஒதுக்கீடு பதவி போனதும் கசக்கிறது என்றால், அவரின் சுயநல அரசியலுக்கு வேறு எடுத்துக்காட்டுகள் தேவையே இல்லை.
Dr. கிருஷ்ணசாமி
தங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக அடையாளப்படுத்தி இழிவுபடுத்தும் வர்ணாசிரமத்தை எதிர்க்க வேண்டிய கிருஷ்ணசாமி, தங்களுக்கான உரிமையைப் பெற்றுத்தரும் இடஒதுக்கீட்டைப் பார்த்து இழிவுபடுத்தும் செயல் என்கிறார். இதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் டிஸைன்.
பழனி ஷஹான், எழுத்தாளர். thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக