புதன், 31 மே, 2017

மலேசிய குடியுரிமை பெற ஜாகிர் நாயக் முயற்சி.. இன்டர்போல் வளையத்துக்குள் ....

Mumbai: Islamic preacher Zakir Naik runs the Islamic International School in the Mazagaon area of Mumbai. But a damning report about the institute by Mumbai Police is likely to trigger a fresh controversy.The report accuses the school of 'brainwashing' students and “urging parents to keep kids away from 'un-Islamic environment',” the Mumbai Mirror reported.
மும்பை: இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசிய குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையைச் சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்,51, தொண்டு நிறுவனம், மற்றும் பீஸ் டி.வி. சானல் ஆகியவற்றை நடத்தி வருகிறார். வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பலியாயினர். இதில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள், தாம் ஜாகிர் நாயக்கின் டி.வி. பேச்சால் கவரப்பட்டதாக கூறினர். பயங்கரவாதத்தினை தூண்டும் இவரது பேச்சு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் வழக்குப்பதிவு செய்துள்ளார். இவரது ரூ.100 கோடி ரூபாய்  சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் அனுப்பி வைக்குமாறு இன்டர்போல் அமைப்பை தேசிய புலனாய்வு ஏஜென்சி வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக சவூதியில் ஜாகிர் நாயக் தங்கியுள்ளதால் உரிய காலத்தில் இந்தியா வராமல்  உள்ளார். இந்நிலையில் ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிசை பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் கோரிக்கை குறித்து மலேசிய அரசு எந்த முடிவு எடுக்க வில்லை.எனினும் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் ஜாகிர் நாயக்கின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அவர் எந்த நாட்டின் குடியுரிமையும் பெறமுடியாதவாறு அந்த நாடுகளின் தூதரகங்கள் வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறது தினமலர்


கருத்துகள் இல்லை: