வியாழன், 1 ஜூன், 2017

ஐ ஏ எஸ் தேர்வு ... தமிழ் விருப்பு தேர்வாக எடுத்த மாணவர்கள் மீது பெரும் அநீதி! 40 பேருக்கு மட்டுமே சித்தி..

ilangovan.balakrishnan.: மெல்லத் தமிழ் இனி சாகும்? நேற்று வெளியாகியிருக்கும் ஐ ஏ எஸ் தேர்வு ரிசல்ட், தமிழ் பாடம் விருப்பு தேர்வாக (optional) எடுத்துப் படித்த தமிழ் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் வந்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு தமிழ் ஆப்சனல் பாடம் எடுத்து எழுதி மெயின் எக்ஸாமில் வெற்றிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் நூறு ஆக அமைந்திருக்கும்.
ஆனால் இந்த வருடம் அப்படியான மாணவர்கள் வழக்கத்துக்கு மாறாக சுமார் 40 பேர் மட்டுமே மெயின் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள்.
ஒவ்வொரு வருடமும் இறுதிப் பட்டியலில் தமிழை ஆப்சனலாய் எடுத்துத் தேர்வெழுதியவர்கள் முதல் பத்து இடத்தில் ஒருவரேனும் இடம் பிடித்திருப்பார்கள்.
ஆனால், நேற்றைய ரிசல்ட்டிலோ, தமிழ் விருப்பு தேர்வாக  எடுத்துப் படித்தவர்களுக்குள் முதலாவது வந்தவரே 300க்கும் கீழான ரேங்கிற்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இந்த வருடம் மட்டும் தமிழ் மொழி எடுத்துப் படித்தவர்கள் அதால பாதாளத்திற்கு திடீரென தள்ளப்பட்டதன் காரணம் தெரியாமல் மாணவர்கள் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.
யாரிடம் கேட்பார்கள் நீதி?
தமிழ் நாட்டுக்கோ, தழிழுக்கோ நாதி இல்லாத இந்தச் சூழலில்...
தமிழ் மாணவனுக்கு ஏது நாதி?

கருத்துகள் இல்லை: