சனி, 3 ஜூன், 2017

பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்: இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பவர் கலைஞர்

திமுக தலைவர் கலைஞரின் 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா இன்று மாலை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது. விழாவில், தேசியத்தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றுப்பேசினார். அவர் தனது உரையில், ’’ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட மாபெரும் தலைவர் கலைஞர். சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவராக திகழ்கிறார் கலைஞர். தனது எழுத்தால் மக்களை சீரிய சிந்தனையில் அழைத்துச்சென்றவர் கலைஞர். சட்டமன்றத்தில் புதிய சரித்திரத்தை படைத்தவர் கலைஞர். கலைஞரின் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் இந்தியாவிலேயே யாருக்கும் இருக்காது. அகில இந்திய அளவில் கலைஞர் படைத்த சரித்திரத்தை யாரும் தகர்க்க முடியாது. இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பவர் கலைஞர். விதவைகள் மறுவாழ்வு திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். பீகாரில் நான் பூரண மதுவிலக்கை கொண்டுவந்தேன். மதுவிலக்கில் பீகார் அரசு முழு வெற்றியை பெற்றிருக்கிறது. பீகாரில் மதுவிலக்கு கொண்டு வந்ததை போலவே தமிழ்நாட்டிலும் கொண்டுவருவேன் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டவர் கலைஞர் ’’ என்று தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் சட்டப்பேரவை வைர விழாவும், 94-வது பிறந்த நாள் விழாவும் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்றார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.>படங்கள்: ஸ்டாலின். அசோக்குமார்
நக்கீரன்

கருத்துகள் இல்லை: