செவ்வாய், 30 மே, 2017

ப.சிதம்பரம்: :கார்த்தி வீட்டில் நடந்த சிபிஐ சோதனையில் இலக்கு நான் தான்

தனது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சிபிஐ சோதனையின் இலக்கு தானே என்றும் எப்.ஐ.ஆரில் தனது பெயர் இல்லையெனினும் தன் மீது குறி வைத்தே மத்திய அரசு இந்த சோதனையை மறைமுகமாக நடத்தியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மே 17ம் தேதி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ விளக்கமளித்தது.
இந்த நிலையில் சோதனை குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ள ப.சிதம்பரம், விதிகளின் படியே ஐஎன்எஸ் மீடியா நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அட்வான்டேஜ் ஸ்டேடர்ஜிஸ் நிறுவனத்திற்கும் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தனது அறிக்கையில் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சோதனையை நடத்தி 2 வாரங்கள் ஆகியும் சிபிஐயால் ஏன் எதையும் நிரூபிக்க முடியவில்லை என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடந்திருந்தாலும் மத்திய அரசின் இலக்கு என்பது தானே என்று சிதம்பரம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். tamilthehindu

கருத்துகள் இல்லை: