புதன், 31 மே, 2017

தியாகராய நகர் ஆபத்து பகுதியாக அறிவிப்பு ..10 மணிநேர முயற்சியிலும் ....

இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. . சுமார் 10 மணி நேரம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. புகை மண்டலமாக காட்சியளிப்பதால தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்க மிகவும் சிரமமாக உள்ளது. தீயை அணைப்பதற்கு 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தண்ணீர் வாகனமும், ஸ்கை லிஃப்டும் இந்த பகுதிக்கு வநதுள்ளது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சென்னை தியாகராயர் நகரில், சென்னை சில்க்ஸ்-ல் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தை அடுத்து கட்டிட நெருக்கடி மிகுந்த பிரதானப் பகுதியானது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, சம்பவ இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
Special Correspondent FB Wing

கருத்துகள் இல்லை: