சனி, 3 ஜூன், 2017

லியோ வரத்கார் .... அயர்லாந்து புதிய பிரதமாராக இந்தியர் வெற்றி பெற்றுள்ளார்


Leo Varadkar is set to become the Republic of Ireland's next taoiseach (prime minister) after winning the leadership of the Fine Gael party.
லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மருத்துவரான லியோ வரத்கர், அயர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அயர்லாந்தின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அயர்லாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்க இருக்கிறது. 38 வயதாகும் வரத்கர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு உடையவர். பைன் கேயல் கட்சியைச் சேர்ந்த இவர் வெற்றிபெற்றதை பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. வரத்கர், கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரின் ஆதரவு கிடைத்ததால் 60 சதவீத வாக்குகளைப் பெற்று உள்துறை அமைச்சருக்கு எதிராக வெற்றி பெற்று கட்சியின் 11-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பையை சேர்ந்த இந்தியரான அசோக் வரத்கர், அயர்லாந்தின் நலத்துறை அமைச்சரான மிரியம் தம்பதிகளுக்கு பிறந்த வரத்கர் டப்ளினில் பிறந்தார். அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி தனது பதவியை 2017 தொடக்கத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், வரத்கர் பிரதராக பொறுக்கேற்க உள்ளார்.மாலைமலர்

கருத்துகள் இல்லை: