வியாழன், 1 ஜூன், 2017

பழ.நெடுமாறன் அல்ல.... பழம் தின்ற நெடுமாறன்?

stanley.rajan.: தமிழக தினசரி பல உண்டு, அதில் நீண்ட பாரம்பரியும் தனி தன்மையும் கொண்டது தினமனி, இன்றும் அதன் தமிழும் கருத்துக்களும் தனித்துவமாக நிற்பவை
தினதந்தி போன்றவை தமிழை கொலை செய்தன, சீமான் போன்ற பண்பாடில்லாத தமிழனைத்தான் கொடுத்தன‌, தமிழ் நாகரீகம், பேச்சு நாகரீகம், எழுத்து நாகரீகம் என தமிழருக்கிருந்த பல நல்ல விஷயங்களை கெடுத்தது
அதாவது தாழகிடக்கும் தமிழரை மேலே எடுத்து சென்று நல்ல தரத்தில் நிறுத்த தவறி, அவர்கள் அளவிற்கு தமிழை இழுத்து சென்று அதன் தரத்தை கெடுத்தார்கள், அப்படி பல உண்டு
தினமணி போன்றவை அதில் தனித்து நின்றவை
அப்படிபட்ட தினமணி இன்று பழ.நெடுமாறன் எனும் தேசவிரோதியினை எழுத வைத்திருக்கின்றது
எதில்? இந்தியா உலகில் தனிமைபடுகின்றதாம், நட்புநாடு எனும் சொல்லபடும் இலங்கை இந்தியாவினை ஏமாற்றுகின்றதாம், இப்படி உளறுகின்றார்
இதனை ஒரு பாரம்பரிய மிக்க தினமணி அனுமதித்தது பெரும் தவறு
இலங்கை நமது நட்பு நாடு என்பது அரசியல் ராஜ தந்திரத்தில் சொல்லபடும் வார்த்தையே அன்றி, என்றுமே அது நம் சந்தேகத்திற்குரிய நாடு

அமெரிக்கா சவுதி , சீனா வியட் நாம், ரஷ்யா ஜார்ஜியா என நட்புநாடுகள் என சொன்னாலும் உள்ளூர சந்தேகமே, உலகளாவில் சுயநலமே பிரதானம்
இந்தியா சிங்களனை எப்படி கையாள வேண்டுமோ அப்படித்தான் கையாளுகின்றது, நம்பிடி இலங்கையில் ஒரு நாளும் விடாது, வர்த்தகம் முதல் அரசியல் வரை நம் பிடி உண்டு
இன்னும் சொல்கின்றார், சீனாவில் நடந்த மண்டல மாநாட்டை இந்தியா புறக்கணித்திற்றாம், அவர்கள் செய்வதெல்லாம் ஏமாற்று வேலை, பொருட்களில் 70% போலி, பிளாஸ்டிக் முட்டை, அரிசி, முட்டைகோஸ் என அவர்கள் பொருளை உலகமே தள்ளிவைக்கின்றது
அந்த சீனாவுடன் என்ன பொருளாதர உறவு வேண்டி இருக்கின்றது?
இன்னமும் வியட்நாமுடன் சேர்ந்து சீனாவினை சீண்டுதல், ஈரானுடன் சேர்ந்து பாகிஸ்தானை கண்காணித்தல் என இந்தியா செய்யும் விளையாட்டு ஏராளம், பலுசிஸ்தான் விவகார இந்திய தலையிடு குறித்து முஷாரப் சொன்னதும் பொய்யல்ல‌
உண்மையில் உலகளவில் தனிமைபடுவது பாகிஸ்தான், அமெரிக்கா அதன் உதவிகளை குறைக்கின்றது, டிரம்ப் கூட இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்கின்றார்
இத்தேசம் உலகளவில் தனி இடம் பெற்றிருக்கும் பொழுது, இனி இந்தியாவினை தவிர்க்கமுடியாது என உலகநாடுகள் உணர்ந்து நம்பின்னால் வரும்பொழுது இந்த உளறுவாயன் இப்படி உளறினால் என்றால் எப்படி?
நட்பு நாடு எனும் ராஜதந்திர வார்த்தை கூட தெரியாதவனையெல்லாம் தினமணி எழுத வைக்கின்றது
இவர் சொல்லவருவது என்ன?
புலிகள் நல்லவர்கள், அவர்களை இந்தியா காப்பாற்றி தனிநாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும், சிங்களன் நம்பிக்கைகுரியவன் அல்ல அதுதான் அது ஒன்றுதான்
மிஸ்டர் நெடுமாறன், சிங்களன், ஈழ தமிழன் இருவருமே இந்திய எதிர்கள் தான் சிங்களன் கொஞ்சம் யோசித்து நடிப்பான், ஈழ தமிழன் கொஞ்சமும் யோசிக்காமல் கொலை வரை செல்வான்
ஈழ தமிழனும் துரோகி, சிங்களனும் பல்லை கடித்துகொண்டு பொறுக்கும் பாம்பு அவ்வளவுதான்
சிங்களனை விட புலிகளே இந்தியாவிற்கு மகா ஆபத்தானவர்கள்
இந்த தினமணி இம்மாதிரி பொய்யர்கள் , கொஞ்சமும் உலக நிலவரம் தெரியா பதர்கள், எதற்கெடுத்தாலும் புலி ஈழம் என கண்ணாடி போட்டுகொள்பவர்கள் போன்றவர்களை தேசாபிமானமிக்க பத்திரிகையில் எழுத வைப்பது கண்டிக்கதக்கது
மாட்டுகறி முதலான விஷயங்களில் கண்டியுங்கள், மதவெறியுல் கண்டித்து எழுதுங்கள, அது உள்நாட்டு பிரச்சினை
ஆனால் இந்தியாவினை ஏதோ பெரும் முட்டாள் நாடு போலவும், தமிழர் வாழமுடியா நாடு போலும், புலிகள் மகா உத்தமன் போலும் எழுதும் இம்மாதிரி ஆட்களை , துரோகிகளை ஏன் அனுமதிக்க வேண்டும்???
இவவளவு பேசும் நெடுமாறன், மலையக தமிழருக்கு இந்தியா  செய்யும்  உதவியினையோ , ஈழம் பலாலி போன்ற பகுதிகளில் செய்ய்யும் நல்ல காரியம் பற்றி ஏதாவது சொல்வாரா? இல்லை, இவர் பழ.நெடுமாறன் அல்ல, பிணம் தின்ற நெடுமாறன்
அப்படி அவர் மறைத்த காரியங்களை ஏன் தினமணி கண்டிக்கவில்லை? அல்லது கண்டுகொள்ளவில்லை..
இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்

கருத்துகள் இல்லை: