பா.ஜ.க. எதிர்ப்பு, உடையாத பானை! தி.மு.க. இந்த விவகாரத்தை தனது ட்ரம்ப் கார்டாக உபயோகிக்க போகிறது
மதில் மேல் பூனை!! மமதா விடமாட்டார்!!
வெளிநாட்டு சில்லறை வர்த்தகம் நாட்டுக்குள் வரக்கூடிய அன்னிய
நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ.) அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை, தனது
கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ‘கடுமையாக’ நோகாமல் எதிர்க்க முடிவு
செய்துள்ளது பா.ஜ.க. இந்த திட்டம், சிறு வணிகர்களைக் கடுமையாகப் பாதிக்கும்
என்று கூறுகிறது அக்கட்சி.
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், “சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்ப்பது குறித்த உத்திகளை ஆராய, பா.ஜ.க.-வில் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சிறப்புக் கூட்டம் இம்மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயம் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடன் கலந்து பேசிய பிறகே முடிவு செய்யப்படும் என மக்களவையில் தெரிவித்திருந்தார். இதே கருத்தை மாநிலங்களவையில் அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சரும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இவ்விருவரது உறுதிமொழிகளும் மீறப்பட்டுள்ளன. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்கும் விஷயத்தில் அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது. இந்த விஷயம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார் ரவி சங்கர் பிரசாத்.
நாடாளுமன்றத்தில் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு தங்களது எதிர்ப்பைக் காட்ட உள்ளன என்று தெரியவில்லை. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கொண்டுவரும் முடிவு குறித்து பா.ஜ.க., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வராது என்றே தெரிகிறது.
“அடிப்பது போல அடிக்கிறோம். அழுவது போல அழவேண்டும்… டீல் ஓகேவா” நெடி அடிக்கிறது!
இருப்பினும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், அதை வேறு வழியில்லாமல் பா.ஜ.க. ஆதரிக்க நேரலாம்.
அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் பிரதான கட்சிகளான சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக பிரதமர் விருந்து அளித்து பேச்சு நடத்தியுள்ளார். இவ்விரு கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றே கருதப்படுகிறது.
தி.மு.க. மதில் மேல் பூனையாக உள்ளது. பிரதமர் நேரடியாக சில ‘உத்தரவாதங்களை’ தரவேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
தி.மு.க. இந்த விவகாரத்தை தனது ட்ரம்ப் கார்டாக உபயோகிக்க போகிறது என்பதை மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது. இல்லாவிட்டால், அமைச்சர் ப.சிதம்பரம் அவசரமாக கருணாநிதியை சந்திக்க வந்திருக்க மாட்டார், “பாத்து ரொம்ப நாளாச்சு, சும்மா ஜாலியா பேசிட்டு போகலாம்னு வந்தேன்” என்று சும்மா ஜாலியாக சொல்லிக்கொண்டு! கடும் கோபத்தில் திமுக சில மறக்க முடியுமா/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக