ஆகாஷ் 2 என்ற மலிவு விலை டேப்லெட் கணினியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று அறி முகம் செய்து வைத்தார்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மானிய
விலையில் ஆகாஷ் டேப் லெட் கணினியை மத்திய அரசு கொடுக்கிறது. தற்போது ஆகாஷ் 2
டேப்லெட் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று இதை குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்தார். அவர் பேசுகையில், ஆரம்பக்
கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில் இளைஞர்களின் திறனை
அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
ஆகாஷ் 2 டேப்லெட் ஒரு ஜிகா ஹெர்ட்ஸ் திறன்
கொண்ட பிராசசர், 512 மெகா பைட் சேமிப்பு திறன், 7 அங்குல தொடு திரை
கொண்டதாக இருக்கும். 3 மணி நேரம் இயங்கக் கூடிய வகையில் இதன் பாட்டரிகள்
இருக்கும். இந்த டேப் லெட் கணினியை சி டேக் நிறுவனத் தின் ஒத்துழைப்புடன்
மும்பை அய் அய்டி உருவாக்கியுள்ளது.டேட்டாவின்ட் நிறுவனம் இதை தயாரித்து
சந்தைப்படுத்து கிறது.
டேட்டாவின்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி
சுனீத் துலி கூறுகையில், மத்திய அரசு இந்த டேப்லெட்களை ரூ.2,263க்கு
வாங்கிக் கொள்கிறது. அதை பாதி விலையில் ரூ.1,130க்குமாணவர்களுக்கு
விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகளும் மானியம் அளித்தால், இதை
இலவசமாகவே வழங்கலாம் என்றார்.
முதலில் ஒரு லட்சம் டேப்லெட், இன்ஜி
னீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும் வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த தாக மற்ற மாணவர்களுக்கும் இது கிடைக்
கும். அடுத்த 5, 6 ஆண்டுகளில் 22 கோடி மாணவ, மாணவிகளுக்கு இந்த டேப்லெட்
கணினி கிடைக்கும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- இந்தியர்கள் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் போட உதவிய வங்கி மீது விசாரணை
- செல்போன் சிம் கார்டு' வாங்க புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அறிவிப்பு
- பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நிதின்கட்காரியை நீக்க வேண்டும்-எடியூரப்பா
- பெட்ரோல் விலை, லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைகிறது
- பெட்ரோல் விலை 1 ரூபாய் குறைகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக