Pinky retired from athletics after she suffered a road accident three years ago. கொல்கத்தா: நான் தற்கொலை செய்து கொள்ள போலீஸ் விரும்புகிறது என்று தடகள வீராங்கனை பிங்கி பரமனி தெரிவித்துள்ளார்.ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கமும் காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும் வென்ற தடகள வீராங்கனை பிங்கி பரமனி, ஆணாக இருந்து தன்னுடன் குடும்பம் நடத்தி பின்னர், பெண்ணாக மாறி தன்னை ஏமாற்றி விட்டார் என்று கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். கைதாகி ஜாமீனில் விடுதலையான பிங்கியிடம் நடந்த குரோமசோம் சோதனை அறிக்கையில் அவர் ஆண் என்று குறிப்பிடப்பட்டது.
இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் 12ம் தேதி போலீசார் தாக்கல் செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், கொல்கத்தாவில் பிங்கி நேற்று அளித்த பேட்டியில், ‘‘நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று போலீசார் விரும்புகின் றனர். போலீசாரின் தொல்லை குறித்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதுவேன். ஆண் ஹார்மோன்கள் அதிகம் இருப்பதாலேயே நான் ஆண் அல்ல. மேலும் சோதனைகள் நடத்த வேண்டியுள்ளது’’ என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக