சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு- பார்லி.யில் அக்னி பரீட்சைக்கு தயாராகும் மத்திய அரசு
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதித்த உடனேயே ஆளும் கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகியது. மற்றொரு கூட்டணிக் கட்சியான திமுகவோ இறுதி நேரத்தில் முடிவெடுப்போம் என்று 'சஸ்பென்ஸ்' யுக்தியை அறிவித்திருக்கிறது. http://tamil.oneindia.in/
இந்த விவகாரத்தில் அரசை எதிர்த்து வரும் இடதுசாரிகள், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கிறது. இதற்காக கடிதத்தை நாடாளுமன்ற இரண்டு அவைகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருப்பதாக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிரார்.
இடதுசாரிகள் கொண்டுவரும் வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானம்தான் வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முக்கிய அம்சமாக இருக்கப் போகிறது. இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் பாரதிய ஜனதா ஆதரிக்கத் தயார் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் இடதுசாரிகளின் பரம வைரியான திரிணாமுல் என்ன நிலை எடுக்கும்? என்பதுதான் கேள்வி. திரிணாமுல் தனியே ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று ஏற்கெனவே சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தி இருக்கிறது. டெல்லியில் இடதுசாரிகள் நடத்திய போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் கலந்து கொண்டார். இந்நிலையில் இடதுசாரிகளின் தீர்மானத்துக்கு சமாஜ்வாதி ஆதரவு தெரிவிப்பதைத் தடுக்கும் வகையில் பிரதமர் அண்மையில் விருந்து வழங்கி உறவு பாராட்டியிருக்கிறார். ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கும் திமுகவோ, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு விவகாரத்தில் கடைசி நேரத்தில்தான் முடிவெடுப்போம் என்று பகிரங்கமாகவே 'சஸ்பென்ஸ்" யுக்தியை அறிவித்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் இடதுசாரிகளின் தீர்மானத்தை ஆதரித்தால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். இருப்பினும் எப்படியும் முலாயம்சிங்கும் மாயாவதியும் தங்களைக் காப்பாற்றிவிடுவார்க என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது மத்திய அரசு
அக்னி பரீட்சை.. அக்னி பரீட்சைங்கிறது இதுதானோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக