தங்களது சந்தேகத்தை போக்க விஸ்வரூபம் படத்தை தங்களுக்கு திரையிட்டு காண்பித்த பிறகே வெளியிட வேண்டும் என்று பல இஸ்லாமிய அமைப்புகள் சமீபத்தில் கோரிக்கை விடுத்தனர்<சாதாரண விஷயமாக இருந்தாலும் அதை புதிய முறையில் அணுகும் கமல் இந்த பிரச்சனையிலும் புதிய அணுகுமுறையில் செயல்பட்டிருக்கிறார். திரைத்துறையில் முக்கியப் பதவியிலும், பிரபலமாகவும் இருக்கும் இயக்குனர் அமீர் ஒரு இஸ்லாமியர். படத்தைப் பார்த்து அமீர் ஓகே
சொல்லிவிட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று நம்பிய கமல் அமீரை விஸ்வரூபம் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம்.ஒரு இஸ்லாமியன், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் செயலுக்கு துணை போகமாட்டான் என்பதால் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்ந்துவிடும் என்ற நோக்கில் கமல் செயல்பட்டுள்ளாராம். கமலின் பிறந்தநாளன்று நடக்கவிருந்த விஸ்வரூபம் படத்தின் இசைவெளியீட்டு விழா நவம்பர் மாதமே நடந்துவிடும் என்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக