India's fundamental role in global gold market
பண்டிகை காலத்தில், தங்க நகை வாங்குவதையும், கழுத்தில் அணிந்து மகிழ்வதையும் பெண்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமீபகாலமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த போதும், தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறையவில்லை. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கோவை நகரில் உள்ள 350க்கும் மேற்பட்ட தங்க நகைக்கடைகளில், கடந்த பத்து நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்திருப்பதே இதற்கு ஆதாரம். http://www.dinamalar.com/
அது தானே எவ்வளவு ஏத்தினாலும் உங்களுக்கு வாங்குகிற சக்தி இருக்கும் வரை தயங்க மாட்டீங்க? நீங்க திருந்துவீங்கன்னு நினைச்சா அது எங்க முட்டாள் தனம்.
கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது: தங்கத்தின் விலை உயர்ந்த போதும், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீபாவளிக்கு எதிர்பார்த்த அள வில் வர்த்தகம் இல்லையென்றாலும், ஓரளவு வர்த்தகம் நடந்துள்ளது. சாதாரணமாக நாளொன்றுக்கு நகரில் உள்ள கடைகளில் 15 கிலோ முதல் 20 கிலோ வரை, வர்த்தகம் நடக்கும்; பண்டிகை காலங்களில் 50 சதவீதம் விற்பனை அதிகரிக்கும். தற்போது 20 சதவீதம் மட்டுமே விற்பனை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால், ஐந்து கிராம், தங்க நகை வாங்கும் நபர் 2 கிராமும், 1 பவுன் தங்கம் வாங்கும் நபர் 4 கிராமும் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; இருப்பினும், விலை உயர்ந்தாலும், பண்டிகை கால வர்த்தகம் என்பது நடந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் கோவை நகரில் உள்ள தங்க நகைக்கடைகளில், சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, முத்து வெங்கட்ராம் தெரிவித்தார்.கோவை தங்க நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சபரிநாத் கூறுகையில்,""தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ""இருப்பினும், தீபாவளி முன்னிட்டு நகரில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. விலை உயர்வால், தங்கத்தின் மீதான மோகம் குறையவில்லை; வாங்கும் அளவு குறைந்திருக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக