புதன், 14 நவம்பர், 2012

பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!


பழனியில் முருகன் மட்டும் தான் ஆண்டி – அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.
 இந்த ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்த பார்ப்பனப் புரோகிதர்கள், முருகப்பெருமானின் பின்புறத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டி எடுத்து  அரசியல்வாதிகளுக்கு படையல் வைத்து விட்டதாகவும்,  அவ்வாறு முருகனைக் கூறு போட்டதில் ஆர்.எம்.வீ.க்கு கொஞ்சம் பெரிய ‘பீசாக’ கிடைத்தது என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

மீபத்தில் சொந்த வேலையாக பழனி செல்ல வேண்டியிருந்தது. வேலை முடிந்து ஊர் திரும்புமுன் கொஞ்சம் நேரம் இருந்ததால், நம்ம தண்டபாணி எப்படி இருக்கிறான் என்று ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாமே என்று தோன்றியது. தண்டபாணியின் ‘பின்புறத்தை’ வெகு வேகமாக வெட்டிச் சுரண்டி விற்று வருகிறார்கள் என்றும், கூடிய சீக்கிரம் விடைப்பாக நின்று கொண்டிருக்கும் முருகன் விழுந்து விடக்கூடும் என்றும் வெகு நாட்களாகவே ஒரு செய்தி உலவியதால், ‘தரிசனத்தை’ நான் தள்ளிப்போட விரும்பவில்லை.  மலையையே சுரண்டி விற்கும் காலத்தில் சிலை எம்மாத்திரம்? http://www.vinavu.com/

பழனி எனும் திருஆவினங்குடி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாம். இருந்த போதிலும் வருமானத்தில்  இதுதான் முதல் இடமாக இருக்கும். இங்கே முருகன் மட்டும் தான் ஆண்டி – அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.
நடைபயணமாக அரும்பாடு பட்டு வரும் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலிக்கிறாரோ இல்லையோ, நோயை மட்டும் தவறாமல்  அளிக்கிறார்.  சுகாதாரக் கேடுகள் மலிந்த நகராட்சிகளுக்குள் ஒரு போட்டி வைத்தால், பழனி அன் அப்போஸ்டில் ஜெயித்து விடும் – அத்தனை சிறப்பு. அதுவும் தைப் பூசம் மற்றும் பங்குனி உத்திர நாட்களில், ஊரே பஞ்சாமிர்தம் தான்.
முன்பெல்லாம் பழனி படிக்கட்டுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்திருந்தது. தொழில் போட்டி என்று வந்து விட்டால் பிச்சைக்காரனாவது, முருகனாவது – தூக்கி வீசியெறிந்து விட்டார்கள் போலத்தெரிகிறது பழனி கோயில் பார்ப்பனர்கள். நான் சென்றிருந்த போது வரிசையில் நிற்காமல், சிலர் மட்டும் பவிசாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர், கூடவே ஒரு அர்ச்சகரும்.
வரிசையில் முன்னே நின்று கொண்டிருந்தவர் சலித்துக் கொண்டார். “ச்சை.. எங்களையெல்லாம் பாத்தா மனுசனுகளாவே தெரியலையா இவனுகளுக்கு?” ஆமோதிப்பிற்காகத் என்னைத் திரும்பிப் பார்த்தவர், எதிர்பார்த்தது கிடைத்ததும் தொடர்ந்தார். “இந்த நாயிங்க தானுங்க முருகனையே சொரண்டித் தின்னு போட்டானுக” ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த சேதிதான்.  இருந்தாலும், மீண்டுமொரு முறை உள்ளூர்க்காரரின் வாயினால் கேட்க சுவையாக இருந்தது.
பழனி முருகனின் சிலை போகர் எனும் சித்தரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷானக் கட்டு என்று சொல்கிறார்கள். இந்த நவபாஷானம் தீராத நோயையெல்லாம் தீர்க்குமென்றும், இளமை கூடும் என்றும் பல்வேறு கதைகளைச் சொல்வார்கள். 1980களில் இந்தப் புரளிகள் மர்மக் கதை போல மிகப் பிரபலம். அதனை எடுப்பதற்கு இந்த ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்த பார்ப்பனப் புரோகிதர்கள், முருகப்பெருமானின் பின்புறத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டி எடுத்து  அரசியல்வாதிகளுக்கு படையல் வைத்து விட்டதாகவும்,  அவ்வாறு முருகனைக் கூறு போட்டதில் ஆர்.எம்.வீ.க்கு கொஞ்சம் பெரிய ‘பீசாக’ கிடைத்தது என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“ பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.. வட்டக் குதத்தை வடிவேல் காக்க..  நகநக நகநக நகநக நகென.. டிகுடிகு டிகுடிகு டிகுகுண டிகுண..” என்று சூலமங்கலம் சகோதரிகள் குரலில் கந்தர் சஷ்டி கவசம் என் காதில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.
வழியும் வியர்வையைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே நண்பர் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.  அர்ச்சனைத் தட்டுகளை எடுத்துச் செல்ல 150 ரூபாய் வரை கட்டணமாம். அதில் தேங்காயை ஸ்பெஷலாக உள்ளே எடுத்துச் சென்று, பின்னர் பக்தர்களுக்குத் தனியே வழங்குவதற்கு தனி கமிசனாம். சாமிக்கும்— பக்தனுக்கும் இடைத்தரகராக அர்ச்சகர் என்றால், அந்த இடைத்தரகருக்கும் பக்தருக்கும் இடையில் இன்னொரு தரகராம்.
ஒரு வழியாக வரிசை முன்னேறியது. பக்தர்களின் முகங்களிலோ பரவசம், பக்தி, பயம், ஏக்கம், ஏமாற்றம், துன்பம், எதிர்பார்ப்பு, ஆசை என்று பல்வேறு பாவங்கள்; தட்டேந்தி நிற்கும் பார்ப்பனர்களின் முகங்களிலோ ஒரே பாவனை தான் – அது எரிச்சல் கலந்த கடுகடுப்பு. தட்டில் காசு போட்டவர்களுக்கு மாத்திரம் திருநீரை வீசினார்கள். அதிலும் பத்து ரூபாய்களுக்கு மேல் போடுபவர்களுக்கு சின்னச் சின்ன தாள்களில் மடிக்கப்பட்ட சிறிய விபூதிப் பொட்டலங்களை விட்டெறிந்தனர்.
பக்தர் ஒருவர், அர்ச்சகரின் பைக்குள் கையை விட்டு விபூதி பாக்கெட்டுகள் சிலவற்றை லவட்டி விட முடியுமா என்று முயற்சித்தார். பழனிக்கே பஞ்சாமிர்தமா? சுதாரித்துக் கொண்ட அர்ச்சகர் பையை இறுகப் பற்றிக் கொண்டே லோக்கல் மதுரைத் தமிழில் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார். தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் திகைத்துப் போனார்கள்.
வெளியே வரும்போது, ஒரு சின்னப் பெண் கையிலிருந்த விபூதியை வாயில் போடச் சென்றாள்.  வரிசையில் நம்மோடு பேசிக் கொண்டிருந்தவர் பதறிப்போய் அந்தப் பெண்ணின் கையைத் தட்டி விட்டார்.  “பாப்பா இத வாய்ல போட்றாதம்மா, நல்லதில்லே” என்றபடி நம்மை நோக்கித் திரும்பியவர், “சுத்தக் கலப்படம் சார்” என்றார்.
“என்னாங்க சொல்றீங்க? இது சாம்பல் தானே?”
“இல்லீங்க, இதெல்லாம் வீணாப் போற காகிதக் கூழில் கெமிக்கல் கலந்து தயாரிக்கறாங்க” என்றவர், கையிலிருந்து நழுவப் பார்த்த பஞ்சாமிர்த டப்பாவை பத்திரமாய் பைக்குள் போட்டுக் கொண்டார். அதன் மூடி லேசாகப் பிளவு பட்டிருந்தது. நான் பார்ப்பதை கவனித்துவிட்டார்.
“இது மட்டும் எப்படிங்க ஒரிஜினலா இருக்கும்? இதுவும் போலி தான்” என்றவர், “ஆனா ஒரிஜினலை விட இது கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்” என்றபடி கண்ணைச் சிமிட்டினார்.
ஆச்சர்யமான எனது பார்வையைக் கவனித்தவர், “அட, ஒரிஜினல்ல புழுவா நெளியும். அதுக்கு இது பரவாயில்ல தானே?” என்றார்.
பேசிக் கொண்டே வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். தரையிலும், படிக்கட்டுகளிலும் உயர்தர கிரானைட் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. “இது மதுரையின் எந்த மலையாக இருக்கும்? இந்த பழனி சாமிக்கு, அந்த பழனிச்சாமி கொடுத்த லஞ்சமாக இருக்குமோ” என்று யோசித்துக் கொண்டே இறங்கினேன்.
கூட வந்தவர் அதற்குள் நன்றாக நெருக்கமாகியிருந்தார். பழனி பஞ்சாமிர்தத்துக்கு அடுத்தபடி சித்தர்களுக்குத்தானே புகழ் பெற்றது! சாக்கடை சித்தர்னு ஒரு சித்தராம். கடந்த 30 ஆண்டுகளாக சாக்கடை நீரைக் குடித்து, அதிலேயே குளித்து வரும் அந்தச் சித்தரிடம் அடி வாங்கினால் நல்ல பலன் இருப்பதாக நம்பி பக்தர்கள் சாமியாரை அடிக்கச் சொல்லி உடம்பை காட்டுவார்களாம். சமீபத்தில் கோவையில் இருந்து வந்த ஒரு தொழிலதிபரை சாக்கடை சாமியார் அறைந்ததில் அவருக்கு காது செவிடாகி விட்டதாம்.
ஒரு சித்தர் காறித் துப்பினால் நன்மை விளையுமாம்; இன்னொருவரிடம் கெட்ட வார்த்தையால் ஏச்சு வாங்கினால் குலம் விருத்தியடையுமாம். ஒருவர் கஞ்சா சாமியாம்; அவரிடம் குறி கேட்க வேண்டுமானால் கஞ்சா படைக்க வேண்டுமாம். சற்று தூரத்திலேயே கஞ்சா விற்பனையும் ரகசியமாய் நடந்து கொண்டிருந்தது. பல்வேறு ‘சித்தர்களின்’ மகாத்மியங்களை நண்பர் சொல்லச் சொல்ல நாராசமாய் இருந்தது. கடைசியில் பொறுமையிழந்தேன்.
“ஏங்க, பீ தின்னி சித்தர்னு எவனும் இல்லீங்களா?” என்றேன். துணுக்குற்றுப் போய், ஒரு சங்கடமான சிரிப்புடன் விடைபெற்றுக் கொண்டார்.
“நாத்திகர்களான நீங்கள் எங்கள் மனதைப் புண்படுத்துவது போலப் பேசுகிறீர்கள்” என்று எனது ஆத்திக நண்பர்கள் குறைபட்டுக் கொள்வதுண்டு.  உண்மையில் ஆத்திகர்களையும், பக்தர்களையும் புழுவினும் கேவலமாக மதிப்பதும், அவர்கள் உணர்வுகளைப் புண்படுத்துவதும், அவர்கள் பக்தியைக் கொச்சைப் படுத்துவதும் யார் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஒரு முறை பழனி கோயிலுக்குச் சென்று வரலாம்.
அப்புறமும் திருந்தாதவர்கள், கந்தர் சஷ்டி கவசத்தில் ஒரே ஒரு வரியை திருத்திக் கொள்ளலாம்.
“சூடு சொரணை சுயமரியாதை..
பக்கப் பிளவை படர்தொடை வாழை..
எல்லாப்பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக் கருள்வாய்”

கருத்துகள் இல்லை: