துப்பாக்கி பட விவகாரத்தில் திடீர் திருப்பம்! காட்சிகள் கட்!! அடுத்த படத்தில் விஜய் இஸ்லாமியர்!!
விஜய் நடித்த துப்பாக்கி படம் பற்றி இஸ்லாமிய அமைப்புகள்
போராட்டம் நடத்திய விவகாரம், வித்தியாசமான திருப்பத்தை சந்தித்துள்ளது.
படத்திலுள்ள காட்சிகளை நீக்க சம்மதித்ததுடன், அடுத்த படத்தில் விஜய்
இஸ்லாமியராக நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://viruvirupu.com
துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை அறிவித்தபோது, இதை எதிர்பார்த்திராத டைரக்டர், தயாரிப்பாளர், மற்றும் ஹீரோ அதிர்ச்சி அடைந்தனர். சில முயற்சிகளின்பின், இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிதிகளுடன் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, ஆகியோருடன், விஜய் சார்பில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சில மணிநேரங்கள் நடந்த பேச்சுவார்த்தையில், இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிதிகள் தரப்பு படத்தில் இருந்து 14 காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதாகவும், இவர்கள் 10 காட்சிகளை நீக்க சம்மதித்ததாகவும் தெரியவருகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் “ துப்பாக்கி படத்தை முழு கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் படமாக எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் எடுத்தோம். யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கவில்லை. இஸ்லாமிய மக்களின் மனது புண்படும் வகையில் சில காட்சிகள் அமைந்ததை நினைத்து வருந்துகிறோம். இந்த தவறு தெரியாமல் நடந்ததே தவிர திட்டமிட்டு நடக்கவில்லை. தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் (துப்பாக்கி படம் தொடங்கிய போது இவர்தான் தயாரிப்பாளராக இருந்தவர்), “அனைத்து மதத்தினரையும், ஜாதியினரையும் விஜய் மதிக்கிறார். அவர்களது ரசிகர்களிலும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். துப்பாக்கி படத்தில் நடந்த தவறுக்கு பிராயச்சித்தமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார்” என்றார்.
துப்பாக்கி படத்திலிருந்து எந்த எந்த காட்சிகள் நீக்கப்படும் என்பது பற்றி ஒரு சில தினங்களில் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக