விஜய் ஒரு நடிகர் என்பது தெரியும். அவருடைய பெர்சனல் பக்கங்களை அவருடைய நண்பர்கள், அவரை இயக்கிய இயக்குநர்கள் கூறுவதை விட விஜய்யின் அம்மாவே சொன்னால் எப்படி இருக்கும் என்று விஜய் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் யோசித்திருப்பார்கள் போல அதுதான் தங்க மகன் விஜய்' ஆக மாறியது. விஜய் சிறுவயதில் செய்த குறும்புகள். தங்கையின் மறைவிற்குப் பின்னர் அதற்கு நேர் எதிராக அமைதியாக மாறியது என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.
விஜய்யின் நடிக்கும் ஆர்வம், பாடும் ஆர்வம் ஒவ்வொன்றும் தானாக படிப்படியாக வளர்ந்து வந்ததாக கூறினார். நாளைய தீர்ப்பில் தொடங்கி துப்பாக்கி வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்புத் திறனையும், பாடும் திறனையும் வளர்த்துக்கொண்டதாக கூறினார்.
விஜய் நடனமாடினால் அதில் நுணுக்கம் இருக்கும் என்று கூறிய ஷோபா, திருமலை படத்தில் நடன இயக்குநர் ராகவா லாரான்ஸ் உடன் இணைந்து அவருக்கு ஈடு கொடுத்து ஆட விஜய் முயற்சி செய்திருப்பார் என்றும் தெரிவித்தார்.
தங்கமகன் என்பது தலைப்புக்காக வைத்தது மட்டுமல்ல விஜய் நிஜமாகவே எனக்குத் தங்கமகன்தான் என்றும் பெருமிதத்தோடு கூறினார் ஷோபா சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக