அகதி முகாம்களுக்கு ரூ.25 கோடியில் 2,500 வீடுகள் : ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை:
தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 2,500 புதிய
வீடுகள் கட்டுவதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட
அறிக்கை: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின்
நலனுக்காக, அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை
மேம்படுத்துதல், வீடுகளை பழுது பார்த்தல், சாலைகள் சீரமைத்தல், நூலக
கட்டிடம் கட்டுதல், நியாயவிலை கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும்
குளியலறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக ரூ.25 கோடி நிதி
ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
தற்போது,
அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக, கோவை,
திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை,
புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை
மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள 21 அகதிகள் முகாம்களில்
ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 2,500 வீடுகளை கட்டுவதற்கு ரூ.25
கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக