சென்னை கிண்டி மடுவின்
கரையை சேர்ந்தவர் மாளவிகா (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்,
அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் கிண்டி
மடுவின்கரை மசூதி காலனி அருகே உள்ள டியூசன் சென்டரிலும் படித்து வந்தார்.இவர்,
சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தான்
டியூசன் படிக்கும் ஆசிரியர், தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து
கொடுத்து, தன்னை கற்பழித்து விட்டதாக கூறி இருந்தார். இது பற்றி
விசாரிக்கும்படி கிண்டி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.அதன்படி
கிண்டி உதவி கமிஷனர் ராமன் மேற்பார்வையில், கிண்டி போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் பள்ளி மாணவியை கற்பழித்ததாக டியூசன்
ஆசிரியர் கண்ணன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம்
படித்த மற்ற பள்ளி மாணவிகளிடமும் இதேபோல் தவறாக நடந்து கொண்டாரா? என்பது
பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Soft Drink கில் மயக்க மருந்து மாணவிகளை கெடுத்த டியுசன் ஆசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக