மும்பை: சிவசேனா கட்சித்தலைவர் பால்தாக்ரே உடல்நிலை மிக
மோசமடைந்திருப்பதாக அவரை கவனித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்ட்டிர மாநிலத்தில் தனக்கென ஒரு செல்வாக்கை கொண்டவரும் மூத்த
அரசியல்வாதியுமான பால்தாக்ரே ( வயது 86 ). இவர் மும்பைவாசிகளுக்கே
முக்கியத்துவம் என்ற கொள்கையில் உறுதியாக இருந்து பிற மாநில மக்களை
ஒதுக்கியே வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி
வந்தவர். இவருக்கென தனிச்செல்வாக்கும் , சொல்வாக்கும் உண்டு . இவர்
சொன்னால் படை திரள லட்சக்கணக்கானவர்கள் உண்டு . பா.ஜ,.மற்றும்
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர்களுடன் கூட்டாக ஆதரவுக்கரம் நீட்டியவர் http://www.dinamalar.com/
சமீப காலமாக நோய்வாய்ப்பட்டு வந்த தாக்ரே மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்த படி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவரை கவனித்து வரும் டாக்டர்கள் குழுவினர் கூறுகையில்: தாக்ரேயின் உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. நுரையீரல் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செரிமானம் தன்மை முற்றிலும் குறைந்து விட்டது. கல்லீரல் செயல்பாட்டிலும் சுணக்கம் காணப்படுகிறது. இருப்பினும் நாங்கள் தீவிரமாக, உன்னிப்பாக கவனித்து வருகிறோம். என்றனர்.
பிரதீபா பாட்டில் - தாக்ரே ;
மருமகன் உத்தவ் தாக்ரே மற்றும் ராஜ்தாக்ரே ஆகியோர் இவரது உடல்நலம் குறித்து கவலை அடைந்துள்ளனர். மிக மோசமான நிலை குறித்து கேள்விப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தாக்ரேயை அவரது வீட்டிற்கு சென்று பார்வையிட்டார். கடந்த 2007 ஜனாதிபதி தேர்தலில் பிரதீபாவுக்கு பெரும் ஆதரவை தெரிவித்தவர் தாக்ரே ஆவார்.
இவர் நலமடைய சிவசேனா மற்றும் நவநிர்மாண் கட்சி தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்ரே நிருபர்களிடம் கூறுகையில்: தாக்ரேயின் உடல் நிலை சீராகத்தான் உள்ளது. இவரால் சூப் போன்ற ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள முடிகிறது. யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக