திருச்சி:ஸ்ரீரங்கத்தில்
சர்ச்சைக்குரிய பிராமணாள் கபேயை இழுத்து மூடுமாறு கட்டிட உரிமையாளர்
உத்தரவிட்டதால் கடை காலி செய்யப்பட்டுவிட்டது.
ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணய்யர் என்ற ஹோட்டலின் பெயர் பலகையில் 'பிராமணாள் கபே' என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கு எதிராக பெரியார் திராவிடர் கழகத்தினர் மறியல் போராட்டம் நடத்தி சிறைக்குப் போனார்கள். திராவிடர் விடுதலைக் கழகமும் போராட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் பிராமணாள் கபேக்கு எதிராக திருவானைக்காவலில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனால் ஸ்ரீரங்கத்தில் அந்தக் கடை இருக்கும் கட்டிடத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டல் இயங்கி வந்த கட்டிடத்தில் இருந்த லாட்ஜ் மற்றும் பக்கத்து கடைகளில் வியாபாரம் படுக்கத் தொடங்கிவிட்டது. இதனால் கடுப்பாகிப் போன கட்டிட உரிமையாளர் ஹோட்டலை காலி செய்ய சொல்ல இப்போது பிராமணாள் கபே-க்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது.
ஆனாலும் நக்கீரன் வாரமிரு இதழுக்குப் பேட்டி கொடுத்திருக்கும் அந்தக் கடையின் உரிமையாளர் மணிகண்டன், நான் சொந்தமாக இடம் வாங்கி அந்த இடத்தில் ஹோட்டல் கட்டி பிராமணாள் கபேன்னு வைப்பேன் என்று கூறியிருக்கிறார்.
அடுத்து, 'ஸ்ப்ளெண்டர் அய்யர்'
பிராமணாள் கபே சூடு முடிவதற்குள் ஹீரோ நிறுவனம் வெளியிட்ட புதிய ஸ்பெளண்டருக்கான அறிவிப்பில் 'ஸ்ப்ளெண்டர் ஐயர்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்த அந்த விளம்பரத்தை ஹீரோ நிறுவனம் விலக்கிக் கொண்டுவிட்டது.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக