வெள்ளி, 16 நவம்பர், 2012

இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தில் 55 தீவிரவாத முகாம்கள்

அகர்தலா:இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடும், 55 வங்கதேச தீவிரவாத முகாம்கள் பட்டியலை, வங்கதேச ராணுவ அதிகாரியிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
அண்டை நாடான வங்கதேசம், மிகவும் ஏழ்மை நாடு. இந்தியாவின், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுடன், 1,900 கி.மீ., எல்லை பகுதியை, வங்கதேசம் கொண்டுள்ளது. அங்கிருந்து, தினமும், ஆயிரக்கணக்கானோர், இந்தியாவிற்குள் ஊடுருவி வரும் நிலையில், இந்தியாவிற்கு எதிரான, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக, ஏராளமான தீவிரவாத முகாம்களும், வங்கதேச எல்லையில் செயல்படுகின்றன.அவ்வப்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டாலும், இப்போது, 55க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் செயல்படுகின்றன.சில நாட்களுக்கு முன், திரிபுரா மாநிலத்தின், சில்ஹெட் நகரில் நடந்த, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில், தீவிரவாத முகாம் பட்டியலை, இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வழங்கினர்.தீவிரவாத முகாம்கள் பட்டியலை, வங்கதேச அதிகாரிகளிடம் வழங்கிய, இந்திய அதிகாரிகள், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். http://www.dinamalar.com/


இப்படித் தான், மற்றொரு அண்டை நாடான, பாகிஸ்தானில் செயல்படும், இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத முகாம்கள் பட்டியலை, இந்திய ராணுவம் அவ்வப்போது, அந்த நாட்டிடம் அளித்து வருகிறது. எனினும், இந்தியாவுக்கு எதிரான செயல்களை, பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவுக்கு எதிராக, அண்டை நாடுகளில் செயல்படும் தீவிரவாத முகாம்களால், இந்தியாவுக்கு எப்போதுமே ஆபத்து உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

கருத்துகள் இல்லை: