வெள்ளி, 16 நவம்பர், 2012

கபில் சிபல்: 2ஜி' ஏலம் கோர்ட் உத்தரவுப்படியே நடந்தது

புதுடில்லி:""2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், அரசு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில், கோர்ட் உத்தரவுப்படி நாங்கள் நடந்து கொண்டோம்,'' என, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.கடந்த, 2008ம் ஆண்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, வழங்கப்பட்ட, 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மறு ஏலம் நடந்தது. கடந்த, 12ம் தேதி துவங்கி, இரண்டு நாள் நடந்த ஏலத்தில், 9.4 ஆயிரம் கோடி ரூபாய்தான் அரசுக்கு கிடைத்தது. இந்த ஏலத்தின் மூலம், 40 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கில் ஒரு பங்குதான் கிடைத்துள்ளது. http://www.dinamalar.com/
Nava Mayam - newdelhi,இந்தியா

Nava Mayam 1700000000000000000000000000000000 ஊழல்ன்னு, இழப்புன்னு , லஞ்சம் ன்னு , இஷ்டத்துக்கு முட்டையை போட்டு , மக்களை எல்லாம் கூமுட்டையாக்கிடான்களே ...
அரசின் எதிர்பார்ப்பு வீணானதற்கு, ஏலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலை அதிகம் என, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறின."ஏலத்தில் பங்கேற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசுடன் இணைந்து வேண்டுமென்றே, ஏலத்தை தோல்வியடைய செய்துள்ளன' என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபிலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதை மறுத்த கபில் சிபல், கூறியதாவது:2ஜி ஸ்பெக்ட்ரம் மறு ஏலம் விடப்பட்டது, முழுக்க முழுக்க கோர்ட் உத்தரவுப்படி தான். கோர்ட் என்ன சொன்னதோ, அதை தான் நாங்கள் செய்தோம். எங்களுக்கு எவ்வித ஏமாற்றமும் இல்லை.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், "3ஜி ஸ்பெக்ட்ரம் ஏல நடைமுறையை பின்பற்ற வேண்டும்; ஏலத்திற்கு குறைந்த பட்ச அடிப்படை விலையை நிர்ணயிக்க வேண்டும்' என, கூறியது.

இதன்படி, தொலைதொடர்பு ஆணையம் தான், 18 ஆயிரம் கோடி ரூபாய் என, அடிப்படை விலையை நிர்ணயம் செய்தது. ஆனால், ஏலத்தில், 9.4 ஆயிரம் கோடி ரூபாய்தான் கிடைத்துள்ளது.விற்காமல் உள்ள , 2ஜி ஸ்பெக்ட்ரம், மீண்டும் ஏலம் விட வேண்டும்; இதில், எவ்வித சந்தேகமும் இல்லை. என்ன நடைமுறையை பின்பற்றுவது என்பது குறித்து, இன்னும் சில வாரங்களில் முடிவு செய்வோம்.இவ்வாறு கபில்சிபல் கூறினார்.தற்போது நடந்துள்ள ஏலத்தின் முடிவு குறித்து, இன்னும் சில தினங்களில் தொலை தொடர்பு துறை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: