திங்கள், 12 நவம்பர், 2012

2050 ஆம்ஆண்டில் பிரிட்டனில் திருமணம் என்ற ஒன்று இருக்காது

பிரிட்டனில் முறையாக திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் முறையாகத் திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.பிரிட்டனின் சமூக நீதிக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுத்தர குடும்பங்களில் தான் திருமணம் செய்து கொண்டு வாழும் முறையை அனைவரும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது பிரிட்டனில் தற்போது 50 சதவிகித பேர் மட்டுமே முறையாக திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டில் திருமணம் செய்து வாழ்வோரின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும்.< இதற்கு பிரிட்டன் குடும்ப வாழ்க்கையை பலப்படுத்த தெளிவற்ற திட்டத்தை கையாள்வதே காரணமாகும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: