புதன், 14 நவம்பர், 2012

கனிமொழி விவகாரத்தில் காங்கிரஸ் பின்னணி? கலைஞர் சிதம்பரம் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளால், கோபம் அடைந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சமாதானப்படுத்துவதற்காகவே, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் அவரை சந்தித்துப் பேசியுள்ளார் என, கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால், தி.மு.க., - காங்., வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு பிரச்னையில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறி விட்டது; அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது.   http://www.dinamalar.com/ 
 
s.maria alphonse pandian - chennai ,இந்தியா
வழக்கம் போல முழுக்க முழக்க கற்பனையினால் ஆன ஒரு தலைப்பு முக்கிய செய்தி....கடைசியில் கூறப்பட்டுள்ள கலைஞரின் வார்த்தை மட்டுமே உண்மை..அதாவது அந்நிய முதலீட்டு பிரச்சனையில் திமுகவின் நிலை கூட்டதொடரின்போது அறிவிக்கப்படும் என்பது மட்டும்...ஆட்சி கவிழ்வது நிச்சயம் என்னும் சூழ்நிலை வந்தால் மட்டுமே திமுக ஆதரவை வாபஸ் வாங்கும்..அரசுக்கு எதிராக வாக்களிக்கும்..இல்லையெனில் ஐந்தாண்டுகாலமும் ஆட்சிக்கு ஆதரவே அளிக்கும்...திமுகவால் ஆட்சி கவிழ்ந்தது என்னும் நிலை உருவாகாது....ஐந்தாண்டுகாலம் உறுதியான ஆட்சியை அளிப்போம் என மக்களுக்கு தேர்தலின் பொது வாக்குறுதி அளித்துள்ளது நினைவுகூறத்தக்கது..... 

இந்தச் சூழ்நிலையில், வரும், 22ம் தேதி பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த வேண்டும் என்பதில், பிரதமர் தீவிரமாக உள்ளார். அதற்காக, ஐ.மு.கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளையும், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளையும், வளைத்துப் போடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளின் தலைவர்களான, சமாஜ்வாதி தலைவர், முலாயம்சிங் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை, தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார்.
அத்துடன், ஐ.மு.கூட்டணி தலைவர்களுக்கும், விருந்து அளித்தார். ஆனால், அந்த விருந்தில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள, முக்கிய கட்சியான, தி.மு.க., சார்பில், யாரும் பங்கேற்கவில்லை. இதற்கு, சமீப நாட்களாக, தி.மு.க., - காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களே காரணம் எனக் கூறப்பட்டது.
கருணாநிதியின் மகள் கனிமொழி, "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் சிக்கியுள்ளார். இதிலிருந்து, அவரை விடுவிக்க, டில்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், "2ஜி வழக்கை பாதிக்கும் வகையில், பிற கோர்ட்டுகளில் வழக்குகள் உள்ளன; எனவே, பிற கோர்ட்டுகளில் விசாரிக்கப்படும் வழக்குகளை தடை செய்ய வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., திடீரென மனு செய்தது.மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், பிற கோர்ட்டுகளில், "2ஜி' அலைக்கற்றை வழக்குகளை விசாரிக்க தடை விதித்தது. இதனால், கனிமொழி வழக்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அத்துடன், கனிமொழியை வழக்கிலிருந்து விடுவித்து விடலாம் என்ற, தி.மு.க.,வின் எதிர்பார்ப்பும், தவிடு பொடியாகியது.
சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்த விவகாரத்தில், சி.பி.ஐ., தன்னிச்சையாக செயல்பட்டிருக்காது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தான் செயல்பட்டிருக்கும் என, தி.மு.க., மேலிடம் கருதுகிறது. இதற்கிடையில், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, தி.மு.க., மீது குற்றம் சொல்லும் வகையில், மத்திய அமைச்சர் நாராயணசாமி கருத்துக்களை வெளியிட்டார்.
இதுவும், தி.மு.க.,வை மேலும் அதிருப்தி அடைய வைத்தது. நாராயணசாமிக்குகருத்துக்கு, கருணாநிதி பதிலடி கொடுத்தார். கடந்த மாதம், நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, தி.மு.க.,வுக்கு இடம் அளிப்பதற்காக, நாராயணசாமி இருமுறை கருணாநிதியை சந்தித்தார். வழக்கமாக, மூத்த அமைச்சர்கள் தான், கருணாநிதியை சந்திப்பர்.
ஆனால், இளைய அமைச்சரான நாராயணசாமி சந்தித்தது, மத்திய கூட்டணியில் முக்கியத்துவத்தை இழக்கிறோமோ என்ற எண்ணத்தை, தி.மு.க.,வுக்கு ஏற்படுத்தியது. மேலும், பிரதமரின் செயலர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததும் தி.மு.க.,வுக்கு பிடிக்கவில்லை.
இதுபோன்ற தொடர் அணுகுமுறைகளால், காங்கிரஸ் மீதான கோபம், தி.மு.க. தரப்பில் அதிகரித்துள்ளது. அதனால், டில்லியில் பிரதமர் அளித்த விருந்தில், தி.மு.க., சார்பில், யாரும் பங்கேற்கவில்லை என, கூறப்படுகிறது.
மேலும், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், டெசோ மாநாடு தீர்மான நகலை ஐ.நா., சபையிடம் தி.மு.க., அளித்தது. இதுவும், காங்கிரசிடமிருந்து தி.மு.க., விலகிச் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
தி.மு.க., விலகிச் செல்வது, மத்திய அரசுக்கு நல்லதல்ல என, காங்கிரஸ் தலைமை கருதுகிறது. மத்திய அரசிலிருந்து திரிணமுல் காங்கிரஸ் விலகியதைத் தொடர்ந்து, கூட்டணியில் இரண்டாவது இடத்தை தி.மு.க., பெற்றுள்ளது. கூட்டணியின் முக்கிய கட்சி, அதிருப்தியில் இருப்பதை சரிசெய்யவேண்டும் எனவும், காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. அத்துடன் பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடரின் போது, பல்வேறு பிரச்னைகளில், தி.மு.க.,வின் ஆதரவு நிச்சயம் தேவை.
இதையெல்லாம், கருத்தில் கொண்டே, தி.மு.க.,வின் ஆதரவை பெறவும், உண்மை நிலவரத்தை விளக்கும் வகையிலும், கருணாநிதியை சந்திக்க, சிதம்பரத்தை,காங்கிரஸ் தலைமை அனுப்பியதாகத் தெரிகிறது. சிதம்பரமும், காங்கிரஸ் மேலிடம் கூறியபடி, கருணாநிதியை சமாதானப்படுத்தியுள்ளார்.இவர்களின் சந்திப்பின் எதிரொலியாக, மத்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், தி.மு.க.,வுக்கு சாதகமாகவும், தி.மு.க.,வின் நடவடிக்கைகள், மத்திய அரசுக்கு சாதகமாகவும் இருக்கும் என, அரசியல் வட்டாரங்களில், பரபரப்பாக பேசப்படுகிறது. அப்போது முடிவெடுப்போம்...

""பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டால், தி.மு.க.,வின் நிலையை அப்போது முடிவு செய்வோம்,'' என, கருணாநிதி கூறினார்.
சிதம்பரம் சந்திப்பு குறித்து, கருணாநிதி நேற்று நிருபர்களிடம் மேலும் கூறுகையில், ""தீபாவளி கொண்டாடுபவர் சிதம்பரம்.
அதனால், எனக்கு வாழ்த்து சொல்ல வந்தார். நான் தீபாவளி கொண்டாடுவதில்லை; பொங்கல் தான் தமிழர்களின் திருநாள்.
பண்டிகை தினத்தில் கூட, மின்வெட்டு தொடர்கிறது; அ.தி.மு.க., ஆட்சி என்றாலே அப்படி தான்,'' என்றார்
.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: