அடுத்த நாளே, விஜய், ஏஆர் முருகதாஸ், தாணு வீடுகளுக்கு முன்பாக பெரிய ஆர்ப்பாட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்தன. அதில் 60 பேர் கைதாகிய நிலையில், அதற்கடுத்த நாள் 24 இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து பெருமளவில் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர். அத்தோடு, படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தி, மக்களை படம் பார்க்க விடாமல் செய்யப் போவதாக செய்தி பரவியது.
இதில் தியேட்டர்காரர்களுக்கு கிலியடித்துவிட்டது. ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் முன்பு அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, நடந்த தாக்குதல் போல ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்று கையைப் பிசைந்தவர்கள், தயாரிப்பாளருக்கு போன் போட்டு, ஏதாவது பண்ணுங்கள்.. இல்லாவிட்டால் படத்தை தியேட்டரை விட்டு எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றதும் தான்... இந்த பகிரங்க மன்னிப்பு படலத்தை அரங்கேற்றினார்களாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக