சென்னை: எனக்கு நாந்தாங்க போட்டி. சந்தானத்தையெல்லாம் போட்டியாக
நினைக்கவில்லை. இது கடல் மாதிரிங்க, யார் வேண்டுமானாலும் வரலாம்,
போகலாம்... என்று கூறியுள்ளார் நகைச்சுவைப் புயல் வடிவேலு.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறார் வடிவேலு. ஒரே சமயத்தில்ல பல படங்களில் அவர் புக் ஆகியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொண்டேன் என்று தத்துவார்த்தமாக பேசியுள்ளார் வடிவேலு.
இதுதொடர்பாக ஒரு பத்திரிகைக்கு வடிவேலு அளித்துள்ள பேட்டியில்,
நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்த துறையில்தான் இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.
சினிமாவில் நடிக்காமல் இருந்த இத்தனை நாட்களும் நிறைய படங்கள் பார்த்தேன். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று வந்தேன்.
என்னை சந்திக்கும் ரசிகர்கள் நான் படங்களில் நடிக்காமல் இருந்ததற்காக வருத்தப்பட்டனர். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் இதை பற்றியே கேட்டார்கள். நான் ஏன் படங்களில் நடிக்காமல் இருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஓய்வில் இருந்த நாட்களில் வாழ்க்கையை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். இயக்குனர்களிடமும் தொடர்பில் இருந்தேன். சில கதைகள் பற்றியும் விவாதித்தேன். தற்போது மீண்டும் கலக்க வந்துள்ளேன்.
சந்தானத்துடன் போட்டி என்பதெல்லாம் இல்லை. எனக்கு நானே தான் போட்டி. வேறு யாரும் அல்ல. சினிமா கடல் போன்றது. யாரும் இங்கு வரலாம். திறமையானவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும்.
பூபதிபாண்டியன் இயக்கும் பட்டத்து யானை படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அரசியல் நெருக்கடிகள் எதுவும் எனக்கு தற்போது இல்லை. சினிமாவில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் என்றார் வடிவேலு.
பட்டத்து யானை படத்தில் முதலில் வடிவேல நடிப்பதாக இருந்ததாகவும் பின்னர் சந்தானம் அந்த வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக