சென்னை: தான் நடித்த துப்பாக்கி படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும்
எதிர்ப்பும், போராட்டங்களும் வெடித்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு கோரி
தமிழக அரசை அணுகியுள்ளார் நடிகர் விஜய்.
சமீபகாலமாக பல்வேறு திரைப்படங்களும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. அந்த வகையில் விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள துப்பாக்கி படத்திற்கு தற்போது இஸ்லாமியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், அதை நீக்கக் கோரியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விஜய்யின் வீட்டுக்கும், அவரது தந்தை வசிக்கும் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் சேர்ந்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலை இன்று நேரில் சந்தித்து படத்திற்குப் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தனர். அதேபோல தனது வீட்டுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர படத்தில் இடம் பெற்றுள்ள இஸ்லாமியர்கள் தொடர்பான காட்சிகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர்.
கலைப்புலி தாணுவும்
இதேபோல படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவும் பாதுகாப்பு கோரி மனு கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக