டெல்லி:
7 மாநிலங்களில், சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ. 1,100 கோடி
வசூல் செய்து ஏமாற்றிய ஸ்டாக் குரு நிறுவனத்தின் அதிபர உல்லாஸ், தனது
தாயையே தான் இறந்துவிட்டதாக நம்ப வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
முதலீடுகளுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதாகக் கூறி ஸ்டாக் குரு நிறுவனம் டெல்லி, உத்தர்கண்ட், ஹிமாச்சல் பிரதேஷ், சிக்கிம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் சுமார் 2 லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் முதலீடுகளுக்கு வட்டியும் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து இந்த நிறுவனம் மீது 14,303 பேர் புகார் தரவே, அதன் அதிபரான உல்லாஸ் பிரபாகர் கைரே (33), அவரது மனைவி ரக்ஷா உர்ஸ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ஓராண்டு தேடலுக்குப் பின் அவர்கள் சமீபத்தில் மகாராஷ்டிராவில் வைத்து பிடிபட்டனர்.
இந்த நிறுவனத்தில் 2,05,062 முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வரை முதலீடு செய்துள்ளனர். மொத்தம் ரூ. 1,100 கோடி வரை (முதலில் ரூ. 493 கோடி என்று தகவல்கள் வந்தன) ஸ்டாக் குரு நிறுவனம் வசூலித்து ஸ்வாஹா செய்துள்ளது. http://tamil.oneindia.in/
இவர்களை போலீசார் தேட ஆரம்பித்ததும் மெராதாபாத், டெஹ்ராடூன், அல்வார், நாக்பூர், கோவா, ரத்னகிரி என இடம் மாறி பல்வேறு போலி பெயர்களில் தங்களது 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
2010ம் ஆண்டில் இவர்கள் ஸ்டாக் குரு நிறுவனத்தை தொடங்கியதே கூட இவர்களது போலி பெயர்களில் தான் என்பதும் தெரியவந்துள்ளது. ஏராளமான ஏஜெண்டுகளை நியமித்து மக்களிடம் பணத்தை வசூல் செய்துள்ளனர்.
ரூ. 1,100 கோடி தேறியதும் ஒரு நாள் திடீரென நிறுவனத்தையே மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களுக்கு 20 வங்கிகளில் 100 கணக்குகள் உள்ளன. இவை 13 பெயர்களில் உள்ளன. நாடு முழுவதும் 12 இடங்களில் வீடுகளும் 12 உயர் ரக கார்களும் உள்ளன.
போலி பெயருடன், பல்வேறு இடங்களில் பதுங்கி வாழ்ந்த உல்லாஸ் தான் இறந்துவிட்டதாக தனது தாயையயும் குடும்பத்தாரையும் நம்ப வைத்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2004ம் ஆண்டு ஒரு நில மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவுடன் தலைமறைவாகிவிட்ட இவர் குடும்பத்தாரை தொடர்பே கொள்ளவில்லை. இவர் இறந்துவிட்டதாக குடும்பத்தாருக்கு முதலில் தகவல் அனுப்பிவிட்டு, பின்னர் ஒரு உடலின் போட்டோவையும் அனுப்பி, இது தான் உல்லாசின் உடல் என்று கூறியுள்ளார்.
அதை நம்பி இவர் இறந்துவிட்டதாக அனைவரும் நம்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக