இருவருமே விரும்பி பாலின மாற்றம் செய்து கொள்ள முடிவு செய்தவர்கள். இதற்காக ஹார்மோன் தெரபி சிகிச்சையும் எடுத்துக்கொண்டனர். பிறவியில் அரின் ஆண்ட்ரூஸ் பெண்ணாக இருந்தவர். http://www.tamilmurasu.org/index.asp
அவரது பழைய பெயர் எமரால்டு. ஆணாக மாறிய பிறகு, அரின் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். லூக் என்ற ஆணாக இருந்தவர்தான் தற்போது கேத்தி ஹில் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார். இவர் 18 வயது முடிந்தவுடன் விரைவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறார். ‘‘எங்களிடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். உடல் கோளாறு காரணமாக திருநங்கைகளாக இருப்பவர்களுக்கும் ஆபரேஷன் செய்து பாலினம் மாறுபவர்களுக்கும் உதவுவதுதான் எங்கள் நோக்கம்’’ என்கிறது கேத்தி ஹில் அரின் காதல் ஜோடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக