பெங்களூர்: கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன்
கூட்டணி அமைக்க முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா
கட்சி திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் முதல்வராக இருந்த எடியூரப்பா,
நிலக்கரி சுரங்க முறைகேட்டில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார். இதன்
பின்னர் பாஜவில் அவரது முக்கியத்துவம் குறைந்தது. இதையடுத்து பாஜவிலிருந்து
விலகப் போவதாக அறிவித்தார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு கர்நாடக ஜனதா என்ற
புதிய கட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கட்சியின் பெயரை எடியூரப்பா
கையகப்படுத்தியுள்ளார். எடியுரப்பா ஒரு ஒட்டகம்....இடம் கொடுத்தால் காணாமல் போய் விடும் காங்கிரஸ் கொட்டகை ..ம்ம்ம் காங்கிரஸ் எங்கே நல்ல புத்தி கேக்கப்போவுது ?
அடுத்த மாதம் 10ம் தேதி கர்நாடக ஜனதாவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருப்பதாக கடந்த மாதம் அறிவித்தார். இதற்கிடையில் கர்நாடக ஜனதாவின் இடைக்கால தலைவராக எடியூரப்பாவின் விசுவாசி தனஞ்ஜெயகுமார் நேற்று நியமிக்கப்பட்டார். பொது செயலாளராக லட்சுமி நாராயணாவும், துணை தலைவராக ஸ்ரீனிவாசும் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவர் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனஞ்ஜெய குமார் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: எடியூரப்பா தலைமையில் கர்நாடக ஜனதா கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். காங்கிரசுக்கு 50 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 40 இடங்களும், பாஜவுக்கு 30 இடங்களும் கிடைக்கும். மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் விரும்பாது. எனவே எங்களுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும். காங்கிரசுடன் சேர்ந்து நாங்கள் ஆட்சி அமைப்போம். ஆர்எஸ்எஸ் உறவை துண்டிப்பதன் வாயிலாக சிறுபான்மையினர் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும். மேலும் லிங்காயத் சமூகத்தினர் வாக்குகளும் எங்களுக்கே கிடைக்கும். இவ்வாறு தனஞ்செய குமார் கூறினார். http://www.tamilmurasu.org/index.asp

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக