கடந்த
வியாழக்கிழமை புலிகளின் உள்வீட்டு பிணக்கு காரணமாக அவ்வியக்கத்தின்
முக்கியஸ்தன் எனக்கூறப்படுகின்ற பரிதி என்பவர் சுட்டுக்கொலை
செய்யப்பட்டிருந்தார். இவரது கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற
சந்தேகத்தின் பெயரில் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவதாக கைது செய்யப்பட்டுள்ளவர் ஒரு ஊடகவியலாளர். மேற்படி இருவரிடமும்
மேற்கொண்ட விசாரணைகளின்போது சிறிலங்கா அரசிடம் 50000 ஐரோக்களை
பெற்றுக்கொண்டு கொலையை மேற்கொண்டதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர் என்ற
செய்தியை பரப்பியமைக்காக இவ்ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டள்ளார். பிராண்ஸ்
அரசு மீது அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக இச்செய்தியை
வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஊடகவியலாளரை கைது செய்துள்ள பிரண்ஸ்
பொலிஸார் சம்பவத்தை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொண்டாரா என்ற
கோணத்திலும் விசாரிக்கலாம் என நம்பப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக