கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பறவூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர். இவர், தற்போது 12-ம் வகுப்பில் படித்துவரும் மாணவியான தனது மகளை பணத்துக்கு ஆசைப்பட்டு விபசாரத்தில் தள்ளியதாக எர்ணாகுளம் போலீசில் மாணவி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 153 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மாணவியின் பெற்றோர் சுதீர்-சுபைதா, குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன், கோவையை சேர்ந்த தமிழ்நாடு மின்வாரிய அதிகாரி முருகேசன் உள்பட 73 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நேற்று மேலும் 3 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். இத்துடன், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
பிஜித், இ.எஸ்.ஜஸ்பால் என்ற குட்டன், இஸ்மாயில் ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். நண்பர்களான இவர்கள் மூவரும் மலையாள டி.வி. தொடர்கள் தயாரிப்பு சம்பந்தமான பணிகள் செய்துவருபவர்கள் ஆவார்கள்.
இதில் ஆலப்புழையை சேர்ந்த இ.எஸ்.ஜஸ்பால் என்ற குட்டன், சாவேர்படை Chaverpada என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.
இவர்கள் 3 பேரும் முன்பு பத்தனம்திட்டையில் மாணவியை கற்பழித்தது தெரிய வந்துள்ளது. அப்போது இவர்களுடன் இணைந்து மாணவியை கற்பழித்த மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 3 பேரும் இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்த வழக்கில் டாக்டர் ஹாரிஸ் உள்பட 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கேரளாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக