வியாழன், 4 ஆகஸ்ட், 2011

சார்.. ப்ளீஸ் கோ-ஆபரேட் பண்ணுங்க. உங்களை இழுத்துட்டுப் போனா

எகிறிய ஜெ... அலறிய போலீஸ்..!

வீரபாண்டியாருக்கு நாம எல்லோரும் சப்போர்ட்டா இருக்கோம்னு ஊரே பேசிட்டு இருக்குது. இன்னிக்கு நாம அவரைக் கைது செய்யலைன்னா... போலீஸ் மானம் கப்பல் ஏறிடும். இந்த விஷயம் நம்ம நாலு பேரைத் தவிர, வேற யாருக்கும் தெரியக் கூடாது. அதையும் மீறி வீரபாண்டியாருக்குத் தகவல் போச்சுன்னா... நம்ம நாலு பேர் மீதும் கண்டிப்பா கடுமையான நடவடிக்கை இருக்கும்’ - 
 
விடிந்தும் விடியாத நேரத்தில் சேலம் சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ரகசியக் கூட்டத்தில் இப்படி சொன்னார் கமிஷனர் சொக்க லிங்கம். வழக்கம்போல, காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட சேலம் மத்தியக் குற்றப் பிரிவுக் காவல் நிலையத்துக்கு கடந்த 30-ம் தேதி காலை 7.50 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் வந்தார். அவர் காவல் நிலையத்துக்குள் நுழைந்ததும், டெபுடி கமிஷனர் சத்யபிரியா தலைமையிலான ஒரு போலீஸ் டீம் ஸ்டேஷனுக்குள் அதிரடியாகப் புகுந்தது. 'தாசநாயக்கன்பட்டி பால மோகன்ராஜ் என்பவரிடம் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாகக் கொடுத்திருக்கும் புகாரில் உங்களைக் கைது பண்றோம்!’ என்றார் சத்யபிரியா.
உடனே, 'அதெப்படிப் பண்ணுவீங்க? என் வக்கீல்கிட்டப் பேசுங்க...’ என்றபோதே, கோபத் தில் ஆறுமுகத்துக்கு வார்த்தைகள் தடுமாறின. 'சார்.. ப்ளீஸ் கோ-ஆபரேட் பண்ணுங்க. உங்களை இழுத்துட்டுப் போனா... நல்லா இருக்காது. நீங்களே வந்து வண்டியில ஏறிடுங்க...’ என சத்யபிரியா மிரட்டும் குரலில் சொல்ல.. ஆடிப் போன ஆறுமுகம், அதற்கு மேல் அடம் பிடிக் காமல் போலீஸ் வேனில் ஏறிக்கொண்டார். வெளியில் நின்று இருந்த தி.மு.க-வினர் சிலர், போலீஸ் வண்டிக்கு முன்னால் படுத்து மறியல் செய்ய... அவர்களை விரட்டியடித்து, மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா வீட்டில் ஆறுமுகத்தை ஆஜர்படுத்தினார்கள். 'சேலம் மத்திய சிறையில் ஆறு முகத்தை அடைக்கக் கூடாது’ என மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவினைத் தொடர்ந்து, போலீஸ் வாகனம் கோவை சிறையை நோக்கி சீறிப் பாய்ந்தது.
விசாரணையின்போது ஆறுமுகத்துக்கு ராஜ மரியாதை கொடுத்த போலீஸ், திடீரென வீறு கொண்டு எழுந்ததன் பின்னணி இதுதான்

கருத்துகள் இல்லை: