புதன், 3 ஆகஸ்ட், 2011

மதுரை காவல்துறையினர் திருச்செங்கோட்டில் சிறைபிடிப்பு

மதுரையில் கொலை செய்யப்பட்ட பா.ம.க பிரமுகர் இளஞ்செழியன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் தனிப்படையினர் நேற்று திருச்சங்கோடு பக்கம் உள்ள, குமாரமங்கலம், ஓடக்கடு என்ற இடத்தில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த செங்கிஸ்கான் என்பவர் பதுங்கியிருப்பதாக தெரிந்து, அங்கு சென்ற காவல்துறையினர் செங்கிஸ்கானை கைது செய்தனர்.
அப்போது பக்கத்தில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தின் முன்னாள் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் மணி என்பவர் செங்கிஸ்கான் கைது செய்யப்பட்ட தகவலை யாருக்கோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தார்.
அதை பார்த்துவிட்ட காவல் துறையினர் அவரை சுற்றிவளைத்துள்ளார்கள், அப்போது உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி, மணியிடமிருந்த செல்போனை பிடுங்கியுள்ளார்.

இதைப்பார்த்து விட்டு விசைத்தறிக்கூடத்தின் உரிமையாளர் நடேசன் என்பவர் என்ன பிரச்சனை என்று கேட்டுக்கொண்டு அவர்களுக்கு பக்கத்தில்  சென்றுள்ளார். அவரையும் காவல்துறையினர் மிரட்டியுள்ளர்கள்.
 இதைப் பார்த்து விட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரை சுற்றிவளைத்து விச்சரித்துள்ளர்கள். அவர்களிடம் பேசாத காவல்துறையினர், தாங்களின் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்படப்பர்த்துள்ளர்கள், கூடியிருந்த மக்கள் காவல்துறையினர் வெளியில் செல்லமுடியாத வகையில் சாலையில் கற்களை வைத்து தடை ஏற்படுத்தியுள்ளார்கள்.
பொதுமக்களின் முற்றுகையில் சிக்கிய மதுரை காவல்துறையினர் தங்களை காப்பாற்றும் படி, நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கொடுத்தபின்னர் அங்கு வந்த, திருச்சங்கோடு காவல்துறையினர், மதுரை காவல்துறையினரை மீட்டு அழைத்து சென்றனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் காவல்துறையினர், உள்ளூர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்து விட்டுத்தான் குற்றவாளியை கைது செய்ய செல்லவேண்டும் என்பது விதி... ஆனால் எந்த அதிகாரி விதிய மதிக்கிறார்...?

கருத்துகள் இல்லை: