வவுனியாவில் உள்ள புனர் வாழ்வு முகாம்களிலிருந்து இம்முறை 302 முன் னாள் போராளிகள் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுசந்தரணசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில், எதிர்வரும் எட்டாம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. பரீட்சைக்கு தோற்றவிருக்கும் முன்னாள் போராளிகள் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சைகளுக்கு தோற்றுவார்கள். கலைப் பிரிவில் 230 பேரும் வர்த்தக பிரிவில் 57 பேரும் உயிரியல் பிரிவில் 12 பேரும் கணித பிரிவில் 3 பேருமே இவ்வாறு பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். கடந்த வருடம் இவ்வாறு 03 புனர்வாழ்வு முகாம்களில் இருந்து 371 முன்னாள் போராளிகள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள். அவர்களில் 222 பேர் சித்தியடைந்ததுடன் 50 பேர் பல்கலைக்கழக அனுமதியினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக