சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்குக்கு புனித ரமழான் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சவீதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நீண்ட காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றால் அவர் ரிஸானா நபீக் மாத்திரமே. இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சவூதி மன்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தைக் கவனத்திற் கொண்டும் ரமழான் பண்டிகையை முன்னிட்டும் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அனுஷ்டிக்கப்பட்டு வரும் நோன்புக் காலம் முடிவடைந்ததும் ரிஸானாவின் விடுதலை குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்று சவூதி, றியாத் நகரில் அமைந்துள்ள அல் - அபீர் மருத்துவமனையில் கடமையாற்றும் இலங்கையின் பல் வைத்தியர் திருமதி கிதாயா இப்திகார், ரிஸானாவின் பெற்றோரை இன்று புதன்கிழமை சந்தித்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக