மடு வனத்தின் நடுவில் 60 அடி அகலமான புதிய வீதி!
21000 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட மன்னார் மடு வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த சட்டவிரோத மரக்கடத்தல் குறித்து அதிகாரிகள் சிலர் இன்று ஆராய்ந்துள்ளனர்.வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் மடு தேவாலயத்தின் மதகுரு ஆகியோர் சென்று ஆராய்ந்துள்ளனர்.
மடு வனத்தின் நடுப்பகுதியில் இதற்கு முன்னர் வீதி ஒன்று அமைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் புதிதாக வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது 60 அடி அகலத்தில் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீதியை அமைத்தே மர்ம நபர்கள் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த 28ம் திகதி குறித்த வீதியை அமைத்துக் கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டதோடு அதற்கென பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் மற்றும் டிரக் வண்டி என்பவற்றை வனவள அதிகாரிகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக