வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

போலி இந்திய கடவுச்சீட்டுகள் மூலம் பிரான்ஸூக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவர் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தல்

போலி இந்திய கடவுச்சீட்டுகள் மூலம் பிரான்ஸூக்கு செல்ல முயன்ற இந்திய பெண்ணொருவரையும் இலங்கைத் தமிழர் ஒருவரையும் துபாய் குடிவரவு அதிகாரிகள் கைது செய்து இந்தியாவுக்கு நாடுகடத்தியுள்ளனர். இவர்கள் இந்தியாவின் அஹமதாபாத் நகரிலிருந்து துபாய் ஊடக பாரிஸ் நகருக்கு செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு நபர்களின் கடவுச்சீட்டுகளில் புகைப்படங்களை மாற்றி இவர்கள் பயணம் செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சித்ராதேவி மனோகரன், இலங்கையர்களான சுபாஷ் கரன் செல்லுதுரை பிள்ளை, வாமதேலன் ஜனகன் ஆகியோரே இவ்வாறு துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்களாவர். இக்கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்ட சென்னை மற்றும் கோயம்புத்தூரிலுள்ள உள்ளூர் அதிகாரிகளின் உதவியின்றி இக்கடவுச்சீட்டுகளை இந்நபர்கள் பெற்றுக்கொண்டிருக்க முடியாது என அஹமதாபாத் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அஹமதாபாத் பொலிஸ் இணை ஆiயாளர் சம்ஷேர் சிங் இது தொடர்பாக கூறுகையில், 'தொழில்நுட்ப ரீதியாக இக்கடவுச்சீட்டுகளில் தவறுகள் எதுவுமில்லை. ஆனால் இம்மூவர் மீதும் துபாய் குடிவரவு அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர். இச்சந்தேக நபர்கள் இலங்கைத் தமிழர்களைப் போன்று பேசினர். விசாரணையின்போது சந்தேகநபர்கள் அழுததுடன் தமதுஅடையாளத்தை வெளிப்படுத்தினர்' என சம்ஷேர் சிங் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: