சிவகங்கை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பதவியேற்றது முதல் நில அபகரிப்பு புகார் மலை போல் குவிந்து வருகின்றது. இந்த புகாரில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானகிரியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. அதன் அருகே கென்னடி என்பவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் போலி ஆவணங்கள் மூலம் வேறு நபருக்கு விற்பனை செய்ததாகவும், இதனை மீட்டுத்தரக் கோரி நில உரிமையாளர் கென்னடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக