புதன், 3 ஆகஸ்ட், 2011

துரோக 'சக்தி'யைத் தூக்கி எறிவேன்!''ஜெயலலிதா

''வழக்கத்துக்கு மாறாக இறுக்கமான முகத்துடன் வந்த ஜெ., மைக்கைப் பிடித்ததும் வார்த்தைகளில் ஆக்ரோஷத்தைக் கூட்டினாராம். 'நல்லாட்சி தருவேன் என்று சொல்லித்தான் நான் ஆட்சிக்கு வந்தேன். அதைக் கொடுப்பதற்கு என்னால் ஆன அளவுக்கு உழைத்து வருகிறேன். ஆட்சியை நடத்துவது... அதுவும் கெட்ட பெயர் ஏற்படாமல் நடத்துவது என்பது கஷ்டமான காரியம். சிறுகச் சிறுக வீட்டைக் கட்டுற மாதிரி, நான் கட்டி வர்றேன். ஆனால் உங்களில் பலர் எனக்கே தெரியாத மாதிரி, ஒவ்வொரு செங்கல்லாக உருவி... வீட்டை இடிக்கப் பார்க்கிறீங்க. இந்த நல்லாட்சிக்கு இடையூறாக இருப்பவர்கள், யாராக இருந்தாலும் அவர்களை சும்மாவிட மாட்டேன். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு எத்தகைய செல்வாக்குப் பெற்ற 'சக்தி’ துணையாக இருந்தாலும் அந்தத் துரோகிகளை தூக்கி எறியாமல் விட மாட்டேன்.’ என்று சொன்ன ஜெயலலிதா அந்த வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போது மட்டும் உணர்ச்சிபூர்வமாகவும் சொன்னாராம்.''
''ம்!''
''நாட்டில் நடந்து வரும் நில மோசடிக் கைதுகளை விளக்கிய ஜெயலலிதா, 'மக்கள் உங்களை உன்னிப்பாகக் கவனித்துக்​கொண்டு இருக்கிறார்கள். எனவே உங்கள் மீது புகார்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நான் ஒருத்தி மட்டுமே உழைத்து, கட்சியை வளர்த்து​விட முடியாது. எல்லாரும் சேர்ந்து உழைத்தால்தான், பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். வீரபாண்டி ஆறுமுகம் கைதுபற்றி ஓ.பன்னீர் செல்வம் சொன்னார். அவருடன் தொடர்பில் இருந்த அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுத்தேன். ஆனால், இன்னமும் உறவு வைத்து இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...’ என்று கோபப்பட்டாராம். 'உள்​ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதிலும் நாம்தான் ஜெயிக்க வேண்டும். அந்த வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்று இன்னொரு முறை நான் உங்களுக்கு விரிவாகச் சொல்கிறேன்!’ என்று அவர்களை அனுப்பிவைத்துவிட்டு எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கு வந்தார்.''

கருத்துகள் இல்லை: