‘‘மதுரையை மீட்பேன்’’ என தேர்தலுக்கு முன்பு மதுரை பொதுக்கூட்டத்திலேயே ஜெயலலிதா முழங்கியபோது, அதற்கு மதுரை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. கடந்த ஆட்சியில் காவல்துறை, அரசு அலுவலகங்கள் என எல்லாமும் மதுரையில் அழகிரி ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. அவரை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை. மதுரை தினகரன் ஊழியர்கள் மூன்றுபேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், அந்தக் குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாய் திரிந்ததும் மக்கள் மனதில் மிகப்பெரிய கோபத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியது.
ஆட்சி மாறியதும் அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், எஸ்ஸார் கோபி என அழகிரியின் கரங்கள் உள்ளே போய்க் கொண்டிருக்க, மதுரை மக்கள் அதைக் கொண்டாடு கிறார்கள். ‘அழகிரி எப்போது கைது செய்யப்படுவார்?’ என்கிற அவர்களது ஆர்வத்தையும் நிறைவேற்ற முழுவீச்சில் களமிறங்கி இருக்கிறார்கள் மதுரை போலீஸார். அவர்கள் அதிகம் சிரமப்பட தேவையில்லாமல், தோண்டத் தோண்ட புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் கொலை வழக்குகளும் அடக்கம்.
‘கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க.வினர் தவிர வேறு யாருக்கும் பூத் கமிட்டி அமைக்க இடம் தரக்கூடாது என தி.மு.க.வினர் மிரட்டினர். ஆனால் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் பூத் கமிட்டி அமைக்க தன்னுடைய இடத்தை சி.பி.எம். வேட்பாளருக்குக் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்ஸார் கோபி, தனது அடியாட்களுடன் சேர்ந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாண்டியராஜனைத் தூக்கிக் கொண்டுபோய் அவனியாபுரத்தில் இருக்கும் தன் தோப்பில் வைத்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
பாண்டியராஜன் மயக்கமடைந்தவுடன் உயர் போலீஸ் அதிகாரி மற்றும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் செல்போன் மூலம் ஆலோசனை செய்துள்ளார். ‘தேர்தல் நேரத்தில் பாண்டியராஜனை உயிரோடு வெளியில் விடுவது ஆபத்து’ என அவர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் மயங்கிய நிலையில் இருந்த பாண்டியராஜனைத் தூக்கிச்சென்று ஈச்சனோடை என்ற இடத்தில் வைத்து தங்களுடைய காரில் ஏற்றிக் கொலை செய்து விட்டனர்’’ என்றார்.
இந்தக் கொலை, அழகிரியின் வழிகாட்டலில்தான் நடந்திருக்கும் என்பது போலீஸாரின் சந்தேகம். எஸ்ஸார் கோபியை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கும்போது, அவர் உ ண்மையைச் சொல்லி விடுவார் என்கிறார்கள் போலீஸார். இதுதொடர்பாக, அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ராமசுப்பு, டி.எஸ்.பி. சுந்தரேசன் ஆகியோரிடமும் விசாரணை நடக்க இருக்கிறதாம். அதேபோல் எஸ்ஸார் கோபிக்கு நெருக்கமாக இருந்த உளவுத்துறை உதவி ஆணையர் குமரவேல்தான் இந்தக் கொலை ஐடியாவைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அவரிடமும் ரகசியமாக விசாரணை நடத்தப்படுகிறதாம். இவர்தான் போலீஸாருக்குக் கிடைத்திருக்கும் ஃபைனல் அஸ்திரம்.
‘‘எல்லாமே பொய்வழக்குகள்’’ என்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் தி.மு.க.வினர் சொல்லிக் கொண்டிருக்க, ‘‘அழகிரியிடம் இருந்து மக்களை காப்பாத்துவோம்னு சொன்னோம். அதைத்தான் செய்யறோம். இதோட அழகிரி அரசியலை விட்டே போகணும். ஐந்து வருடமும் கோர்ட் வழக்குன்னு அலையணும். அப்பதான் மதுரை மக்களுக்கு நிம்மதி’’ என்று ஆவேசப்படுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக