புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் – 8
என்னை ஏற்க மறுத்த புலி முகாம்கள்!
புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளன் சின்னவனை மீண்டும் அங்கே கண்டதும், இன்னமும் ஏதோ விபரீதங்கள் தொடரப் போகின்றன எனத் தோன்றியது. சின்னவன் என்னைக் கண்டதும், “எப்படி ஐயா இருக்கிறியள்?” என ‘மிகுந்த அக்கறையுடன்’ வினவினான். நான், “இருக்கிறேன்” என சுருக்கமாகப் பதிலளித்தேன். உண்மையில் அவனது கேள்வியின் அர்த்தம,; ‘ எப்படி எங்கள் சிறை உபசரிப்பு?’ என்ற கிண்டலும், எனது பதிலின் அர்த்தம், ‘உங்கள் கையில் அகப்பட்டு விட்டேன். இனியென்னன்ன, நீங்கள் நினைத்ததைச் செய்ய வேண்டிது தானே?’ என்பதும்தான். ஆனால் அதை நாம் இருவரும் போலியான நாகரீக முலாம் பூசிக் கதைத்துக் கொண்டோம். பின்னர் அவன,; அங்கிருந்தவனிடம் ஏதோ இரகசியமாகக் கேட்டான். அங்கிருந்தவன் அறையொன்றின் உள்ளே சென்றுவிட்டு, கையில் ஒரு கறுப்புத் துணியுடன் வந்தான். அதன் பின்னர் சின்னவனும், அவனுடன் வந்த இன்னொருவனும், அவர்கள் வந்த சைக்கிளின் அருகே என்னைக் கூட்டிச் சென்றனர். (மேலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக