இராணுவ தலைமைத்துவ பயிற்சியின் போது தியத்தலாவை இராணுவ முகாமில் மாணவி ஒருவர் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இதற்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு முன்னர் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மாணவி உயிர் இழந்து உள்ளார். உயிரிழந்தவர் நிசாந்தி மதுஷானி ( வயது - 24 ) என்பவராவார். ஒவ்வாத பயிற்சியும், மாசு நிறைந்த சூழலில் தங்கி இருந்து அசுத்தக்காற்றினை சுவாசித்ததன் காரணமாக சுவாசப் பையினுள் கிருமிகள் புகுந்ததனாலேயே இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு தொடர்ந்து இந்த பயிற்சிகளை இடைநிறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக