கடந்த ஆட்சியில் தி.மு.க. குடும்பத்தினரிடம் சிக்கித் தவித்த தமிழ்த் திரைப்படத்துறை, ஆட்சி மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியிருக்கிறது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்த, சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட, பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்கள் திரைப்படத் துறையினர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் நடிகர் ராதரவியை சந்தித்து தமிழ்த் திரைப்படத் துறையின் இப்போதைய நிலை குறித்துக் கேட்டோம்…சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டிருக்கிறாரே?
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று புரிகிறது. கடந்த ஆட்சியில் தவறுகள் கண்டும், காணாமலும் விடப்பட்டதைப் போல் இந்த ஆட்சியிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கிறவர்களுக்கு இந்தக் கைது ஒரு எச்சரிக்கை.
‘மிரட்டல்கள் காலமெல்லாம் துணைக்கு வருமா? அந்த ரி.வி.யின் படங்களுக்கு சங்கத்தின் விதிகள். கட்டுப்பாடுகளை மீறி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்தக் தவறுகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் துணை நின்றிருக்கிறது என்று சொல்லலாம் தானே? தவறு நடந்து விட்டதாக இப்போது பேசுகிறவர்கள், அப்போது சரி செய்திருக்க வேண்டும். அரசியல் நுழைந்து விட்டதாகச் சொல்கிறவர்கள் அப்போதே கேட்டிருக்கலாமே? உதாரணமாக ஒரு சம்பவம். அப்போதைய ஆளும் கட்சியைச் சேர்ந்தவரின் ஒரு படத்திற்கு பெயர் பிரச்சினை வந்தது. அது தமிழ்ப் பெயர் இல்லை என்று நான் சொன்னேன்.
ஆனால், மெஜாரிட்டி உறுப்பினர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பத்திரிகைகளில் ஒரு பக்கத்திற்கு விளம்பரம் கொடுக்கக்கூடாது என்கிற தீர்மானத்தை மீறி பலர் அன்றைய முதல்வர்கள் படத்திற்காக விளம்பரம் போட்டார்கள். விதியை மீறிய செயல் என்று சொன்னேன். இப்படி அன்றைய ஆளும் கட்சிக்கு ஆதரவாக திரைப்படத் துறையினர் நடந்து கொண்ட பல சம்பவங்கள் உண்டு!
ரஜினி மிரட்டியது தி.மு.க
நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்றைய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்த சிலர் வற்புறுத்தினார்கள் என்று சொல்லப்பட்டது. அதற்கான பஞ்சாயத்தில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். என்னதான் நடந்தது?
நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்றைய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்த சிலர் வற்புறுத்தினார்கள் என்று சொல்லப்பட்டது. அதற்கான பஞ்சாயத்தில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். என்னதான் நடந்தது?
எந்த விழாவாக இருந்தாலும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்று நடிகர் அஜித், அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு விழாவில் சொன்னார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார்.
ரஜினி எப்படி முதல்வர் கலந்து கொண்ட விழாவில் அப்படி நடந்துகொள்ளலாம் என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் தூண்டி விட்டார்கள். ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஃபெப்சி அடம் பிடித்தது. இயக்குநர் கே.ஆர்.செல்வராஜ், நடேசன் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோரோடு நானும் அந்த பஞ்சாயத்திற்குப் போயிருந்தேன்.
இன்று ரஜினி பற்றி புகழ்ந்து தள்ளும் சிலர் அன்று அவரை அவ்வளவு மரியாதைக் குறைவாகப் பேசினார்கள். அவர் மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும் என்று சொன்னார்கள். நான் தான் ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் என வாதாடினேன். எனக்கு ரஜினி போன் பண்ணி நன்றி சொன்னார்.
கடந்த ஆட்சியில் நிறைய திரைப்படங்கள் வந்தன. அடிக்கடி சினிமா தொடர்பான விழாக்கள் நடைபெற்றன. சினிமா நன்றாக இருந்ததுபோல் தோற்றம் இருந்ததே?
அடிக்கடி விழா நடந்தால் சினிமா நன்றாக இருந்ததாக அர்த்தமா? இதே மாதிரி சினிமா போகுமேயானால் கடைசியில் ஆறு பேர்தான் படம் எடுப்பார்கள் என்று கடந்த ஆட்சியில் நடிகர்களை எச்சரித்தேன். நடிர்களுக்கு பெரிய சம்பளம் கொடுப்பார்கள். ஆனால், சில நடிகர்கள் மட்டுமே நிற்க முடியும். புதிய வளரும் நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும் என்றேன். அந்த குரூப் தொலைக்காட்சி தயாரிக்கிற படங்களின் பிரமோஷன்களுக்காக நடிகர், நடிகைகள் பேட்டி எடுப்பார்கள். அந்த பிரமோஷன் பேட்டிகளில் கூட இடையிடையே விளம்பரங்களைப் போட்டு காசு பார்த்து விடுவார்கள்.
அவர்களது காமெடி சனல்களில் புதிய படங்களின் காமெடி காட்சிகளை அடிக்கடி போடுவார்கள். இதனால், அந்தக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய்விடும். காமெடி காட்சிகள் போட்டால் காசு கொடு, பேட்டி எடுத்தால் பணம் கொடு என்று கேட்கிறோம். அவர்களின் தயாரிப்புப் படங்களின் விளம்பரங்களை மெயின் சனலில் பிரைம் டைமில் போட்டுக் கொண்டு மற்றவர்களின் படங்களை சைடு சனலில் போட்டு விடுவார்கள். இப்படி எல்லாம் இம்சைகளைக் கொடுத்ததால்தான், கைது என்ற செய்தி கேட்டதும், ஸ்வீட்ஸ் கொடுத்தும் கொண்டாடுகிறார்கள்.
அப்படியானால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? அந்த குரூப் சொன்ன நேரத்தில் தான் படம் போட வேண்டும். அவர்கள் படம் எடுக்கச் சொன்னால் எடுக்க வேண்டும் என்றால் எப்படி? நல்ல வேளை, ஆட்சி மாற்றம் வந்ததால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைப்படத்துறை சார்பில் எப்போது பாராட்டு விழா நடத் தப் போகிறீர்கள்?
அது பற்றி முதல்வரிடம் கேட்டோம். எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நீங்கள் உங்கள் சினிமா தொழிலைப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள் என்றார் ரா தாரவி.
அது பற்றி முதல்வரிடம் கேட்டோம். எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நீங்கள் உங்கள் சினிமா தொழிலைப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள் என்றார் ரா தாரவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக