சனல் - 4க்கு எதிராக சாட்சியமளிக்க 11,664 முன்னாள் போராளிகளும் தயார்'
இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள சனல் - 4 தொலைக்காட்சிக்கு எதிராக சாட்சியமளித்து, இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள முன்னாள் போராளிகள் 11ஆயிரத்து 664பேரும் தயாராக உள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை சமூகத்தில் மீள்குடியேற்றவும் ஒன்றிணைக்கவுமான சமய சமூகத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று புனர்வாழ்வு ஆணையாளர் தலைமையதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே புனர்வாழ்வு ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அதாவது நந்திக்கடல் களப்பு பகுதியிலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளே புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியில் ஆரம்பித்த இந்த புனர்வாழ்வு நடவடிக்கையினை தற்போதும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் 594 சிறுவர் போராளிகள், 2,033 பெண் போராளிகள் மற்றும் 9,037 ஆண் போராளிகள் என 11,664பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் எம்மால் புனர்வாழ்வளிக்கப்படும் இந்த 11,664 முன்னாள் போராளிகளும், தங்களது வீடுகளுக்குச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கான காரணம் அறியப்படாத பட்சத்திலேயே நாம் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி தீர்வு காண முற்படுகின்றோம்' என்றார்.
சாயம் வெளுக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக