யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான பாராளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படுமென வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பாக தமிழ் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்கு ஈ.பி.டி.பி. அழைப்பு விடுக்கின்றது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுமானால் அதனால் யாழ்.மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதி, அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பன குறைக்கப்படும். இதுதவிரவும் பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். அவ்வாறான நிலையில் போரினால் அழிந்த பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதும், இழப்புக்களைச் சந்தித்த எமது மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்ற முயற்சிகளும் பாதிப்பாகவே அமையும். எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் பேதங்களுக்கப்பால் இவ்விவகாரத்துக்கு தீர்வொன்றைக்கான முன்வரவேண்டும். அனைவரும் ஒருமித்த கருத்தில் பதிலளித்தால் நிச்சயம் சாதகமான தீர்வொன்றைப் பெறமுடியுமென்று ஈ.பி.டி.பி நம்புகின்றது. இவ்விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்து பாராளுமன்ற ஆசனக்குறைப்பு விடயத்தில் போருக்குப் பின்னரான நிலையைக் கருத்தில் கொண்டு விஷேடமான ஏற்பாட்டின் அடிப்படையில் நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு நிறையவே உண்டு. கடந்த காலத்தில் தீர்வைப் பெற்றுக் கொள்ள கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையும், அழிவு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய வாய்ப்பையும் தவறவிட்டதுபோல் ஒற்றுமையீனத்தால் மீண்டுமொரு தவறு நடந்துவிடக்கூடாது என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக