பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படுவதாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளர் மலிந்த செனவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீலங்கா கார்டியனில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் தூதுவர் ஜய திலக்க இந்தியாவுக்கு சார்பாக இயங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டமானது தமிழீழத்திற்கான எல்லைகளை வரைகின்ற ஒன்றாகவே இருக்கிறது. தூதுவர் ஜயதிலக்க இந்த எல்லைக் கோடுகளை வரைப வராகவே காணப்படுகின்றார். தயான் ஜயதிலக்கவின் புத்திஜீவி துரோகத் தனத்தை ஏற்றுக்கொள்வதற்கு நாடு தயாராக இருக்கவில்லை எனவும் மலிந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் தயான் ஜயதிலக்கவிற்கு எதிராக கையயழுத்து வேட்டையிலும் இறங்கியுள்ளனர். தயான் ஜயதிலக்க ஆரம்பத்தில் ஒரு இடது சாரி சிந்தனையில் இருந்தவர் என்ற போதும் பின்னர் ஒரு பேரினவாத சிந்தனை சார்ந்தே தன்னை மாற்றிக் கொண்டவர். எனினும் அவ்வப்போது 13 ஆவது திருத் தச்சட்டத்தை ஆதரித்தும் பிராந்திய வல்ல ரசான இந்தியாவைப் பகைத்துக் கொள்வதால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய இழப்புகள் குறித்தும் எழுதி வருவதாலே ஜாதிக ஹெல உறுமய அவரை எதிர்த்து வருவதாக நம்பப் படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக