சனி, 27 ஆகஸ்ட், 2011

தேர் திருவிழாவில் வரலாறு காணாத கூட்டம்...பாராட்டாமல் இருக்கவே முடியாது.

நல்லூர் தேர் திருவிழாவில் வரலாறு காணாத மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுவரையில் இதுபோன்ற மக்கள் கூட்டத்தை முழு இலங்கையுமே எங்கும் கண்டிராது என்பது நிச்சயமான உண்மையாகும்.தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் எராளாமானோர் வருகை தந்திருந்தனர். பொதுமக்களுக்கான ஒலிபெருக்கிகள் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் மாறி மாறி அறிவிப்புக்களை வழங்கி கொண்டிருந்ததன.
விரைவில் youtube மூலம் உலக மக்கள் எல்லோருமே இந்த கண்கொள்ளா காட்சியை காண முடியும்.
நல்லூர் கந்தன் மிக மிக கோலாகலமாக பவனி வந்த காட்சியை காணும் பேறு இலங்கை மக்கள் எல்லோருக்கும் இம்முறை கிடைத்தது பெரும் பாக்கியமே.எந்தவித அசம்பாவிதங்களோ களவு போன்ற குற்ற செயல்களோ நடைபெறாமல் மிக மகிழ்வாக நிகழ்வுகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.
சீருடை அணிந்த பாதுகாவலர்களின் தொகை மிக குறைவு தான்.அவர்களின் திறமையை பாராட்டாமல் இருக்கவே முடியாது. 
நல்லூர் கோவில் வீதிகளில் ஏராளமான தமிழ் சிங்கள வர்த்தகர்களும் வாடிக்கையாளர்களும் எள் போட்டால் என்னை விழும் என்று சொல்லக்கூடிய அளவில் காணப்படுகிறார்கள். குறிப்பாக ஐஸ் கிரீம் கடைகள்தான் மிகப்பிரபலம் பெற்றுவிட்டன. விரைவில் நல்லூர் பிரதேசம் ஒரு ஐஸ் கிரீம் நகரம் என்ற நாமத்தை பெறக்கூடும்.
பலரிடமும் சுமார் எத்தனை பேர் திருவிழாவுக்கு சமுகம் அளித்திருப்பார்கள் என்று கேட்டேன் யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. எனது அறிவுக்கும் சரியாக எட்ட வில்லை. எனது அனுமானத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் இதில் பங்கு கொண்டிருக்காலம் என்று கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை: