வியாழன், 25 ஆகஸ்ட், 2011

UNPயின் கொழும்பு அமைப்பாளர் மொஹமட் மஹ்ரூப் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் மொஹமட் மஹ்ரூப் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துள்ளார்.
எதிர்வரும், உள்ளுராட்சி சபை தேர்தலில் தாம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதை கருத்தில் கொண்டே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
மொஹமட் மஹ்ரூப் ஐக்கிய தேசிய கட்சியின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கொழும்பு நகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இவர்களில் மாகாண சபை உறுப்பினர் ஏ ஜே எம் முஸம்மில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மஹரூப், மற்றும் ராம் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து ஏ ஜே எம் முஸம்மில் நேற்று நண்பகல் தமது பதவியில் இருந்து விலகினார்
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் நோக்கத்திற்காகவே தாம் பதவி விலகியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக ஏ ஜே எம் முஸம்மிலின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நம்பதகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: